பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வசன நடை 57

லாதவை ஆறு கூறப்படுகின்றன். அவற்றுள் உரைநடையும் ஒன்று.

அந்த உரைநடையை நான்கு பகுப்பாகப் பிரிக்கிறார் தொல்காப்பியர்.

X X X

இலக்கிய வகைகளில் சில காவியங்கள் பாட்டும்உரையும் கலந்தனவாக இருக்கும். வடமொழியிலுள்ள சம்புக்கள் அந்த முறையில் அமைந்தவையே. தமிழில் தொன்மை’ என்று அவற்றைப் பழங்காலத்தில் சொல்லி வந்தார்கள். உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளென்று சொல்வதும் உண்டு. சங்க காலத்தில் இருந்த இராமாயணமும், பாரதமும் அந்த வகையைச் சார்ந்தவையே. தகடூர் யாத்திரை என்ற பழைய நூலிலும் பாட்டும் உரையும் கலந்திருந்தன. அவை இப்போது நமக்குக் கிடைக்கவில்லை. சிலப்பதிகாரத்தில் இடையிடையே உரை இருக்கிறது. இரண்டாயிரம் வருஷங் களுக்குமுன் இருந்த வசன நடைக்கு உதாரணம் வேண்டு மானால் அதைப் பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது கிடைக்கும் மிகப் பழமையான தமிழ் வசனம் அது. இப்படி, ‘பாட்டிடை வைத்த குறிப்புக்களை உரை வகையில் ஒரு பகுதியாகப் பகுத்தார் தொல்காப்பியர்.

இரண்டாவது வகை பாட்டின் தொடர்பு இல்லாமல் தனியே எழுதி வந்த வசனம். பாடல்களுக்கு உரையாக எழுதப் பெற்றவற்றை இந்தப் பகுதியால் தொல்காப்பியர் குறிக்கிறாரென்று உரையாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.

'பாவின் றெழுந்த கிளவி என்பது அந்த இரண் டாவது வகை. பாட்டில்லாமல் எழுந்த உரை' என்பது அதன் பொருள். பாட்டின்றிச் சூத்திரத்திற்குப் பொரு ளெழுதுவன போல்வன என்று இதற்கு உரை வகுத்த பேராசிரியர் எழுதுகிறார். சூத்திரத்தின் உரைகளைப்பற்றி