பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கி. வா. ஜ. பேசுகிறார்

தனியாக, இலக்கணத்தைப்பற்றிச் சொல்லும்பொழுது, இரண்டிடங்களில் தொல்காப்பியர் சொல்லி யிருக்கிறார்.

நூலெனப் படுவது நுவலுங் காலை

  • - - & 4 W.

உண்ணின் றகன்ற உரையொடு பொருந்தி

என்று சொல்கிறார். நூலென்பது அக்காலத்தில் இலக்கணத் துக்கே வழங்கி வந்த பெயர். இந்த இடத்தில் இலக்கண நூலைப்பற்றிச் சொல்லும் தொல்காப்பியர், உரையை அதற்கு உறுப்பாகவே சோல்லி விடுகிறார். பின்னால் மரபியல் என்னும் பகுதியில் இலக்கண நூலைப்பற்றி விரிவா கச் சொல்லும் பொழுதும் உரையையும் சேர்த்தே சொல் கிறார். ஆகையால் இலக்கண நூல்களின் உரை, இலக்கணத் தின் பகுதியாகி விடும். நூலைப்பற்றிச் சொல்லி அதனோடு தொடர்புபடுத்திய உரையை விரித்துச் சொன்ன தொல் காப்பியர், பாவின்றெழுந்த கிளவி' என்பதில் மீட்டும் அதையே தனியாகச் சொன்னாரென்று சொல்வது சரியாகத் தோன்றவில்லை. 'பாட்டின் சம்பந்தமே இல்லாமல் தனி வசனமாக வந்தவை என்று சொல்வதுதான் பொருத்தம்.

அடுத்தபடி மூன்றாவது வசனப் பகுப்பு, "பொருளொடு புணராப் பொய்ம்மொழி' என்பது. உண்மையல்லாமல் கட்டுக் கதையாக அமையும் இலக்கியம் அது. ஒரு பொரு எளின்றிப் பொய்படத் தொடர்ந்து சொல்லுவன. அவை, ஒர் யானையும் குருவியும் தம்முள் நட்பாடி இன்னுழிச் சென்று இன்னவாறு செய்தனவென்று அவற்றுக்கு இயையப் பொருள்படத் தொடர்நிலையான் ஒருவனுழை ஒருவன் கற்று வரலாற்று முறையான் வருகின்றன’ என்பது பேரா சிரியர் விளக்கம். நீதியை உணர்த்தும் உருவக விநோதக் கதைகளை (Patables) இவர் குறிக்கின்றாரென்று தோற்று கிறது. பழங்காலத்தில் கட்டுக்கதைகள் யாவும் இந்த ரீதியிலே அமைந்திருந்தன என்பதற்கு உலகத்துப் பழைய