பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வசன நடை 蔷9”

இலக்கியங்கள் சாட்சி. கிறிஸ்தவர் வேதமாகிய பைபிளி லுள்ள கதைகளும், உபநிடதக் கதைகளும், பஞ்சதந்திரம் முதலியனவும் இந்த வகையைச் சார்ந்தனவே. தமிழர்களுக் கும் இந்தக் கட்டுக் கதைச் செல்வம் உண்டென்பதையே தொல்காப்பியத்தால் அறிகிறோம். -

நான்காவது பகுதியாகச் சொல்லப் பெறுவது 'பொரு ளொடு புணர்ந்த நகைமொழி என்பது. பொய்யெனப் படாது மெய்யெனப்பட்டும் நகுதற்கு ஏதுவாகும் தொடர் நிலை. அதுவும் உரையெனப்படும். அவையாவன : சிறுநீர் குரீஇயுரையும், தந்திர வாக்கியமும் போல்வனவெனக் கொள்க. இவற்றுட் சொல்லப்படும் பொருள் பொய்யெனப் படாது உலகியலாகி நகை தோற்றுமென்பது என்று விளக்குகிறார் பேராசிரியர். உ ல கத் தி லே நிகழும் நிகழ்ச்சிகளைப் பரிகசித்து நகை தோற்றும் வண்ணம் வெளியிடுவது இப்பகுதி. ஆங்கிலத்தில் உள்ள கிண்டல் (Satire) வகை இலக்கியத்தைப் போன்றது. இதுவென்று சொல்லலாம். நகைச் சுவையுடைய வசன நூல்களாகிய இவ்வகைக்கு, சிறு குரீஇயுரை, தந்திர வாக்கியம் என்னும் இரண்டு நூல்களை உரைகாரர். உதாரணமாகக் காட்டு கிறார். அந்த இரண்டும் இப்போது நமக்குக் கிடைக்* வில்லை.

இந்த நான்கு வகைகளிலும் முன் இரண்டும் யாவருக் கும் உரியனவாம். பின் இரண்டும் செவிலி கூறுவதற்கு உரியனவாம். பாட்டிதான் கதை சொல்லும் ஆற்றலுடை யவள்; கட்டுக் கதைகளையும், பரிகாசப் பேச்சுக்களையும் சொல்விக் குழந்தைகளின் உள்ளத்தைக் கொள்ளை கொள் ளுபவள். இன்னும் கர்ணபரம்பரையாகப் பாட்டிகள் சொல்லி வரும் கதைகள் எல்லாத் தேசங்களிலும் உலவு கின்றன. இவ்விரண்டு பகுப்பையும் இலக்கியங்களாகச் கருதி ஏற்றுக்கொண்டது தமிழுலகம்.