பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

卤0 கி. வா. ஜ. பேசுகிறார்

முன் இரண்டு பகுதியில் 'பாட்டிடை வைத்த குறிப்பு” என்பது பாட்டினிடையே கதைப்போக்கை இணைக்க வருவ தாதலின் அதுவும் பாட்டைப்போலவே கருதுதற்குரியது. சிலப்பதிகாரத்திலுள்ள உரைப்பாட்டு மடை முதலிய பகுதிகளைப் பார்த்தால் அவையும் செய்யுளைப்போன்ற நடையிலே இருத்தலைக் காணலாம். உரைக்கும் செய்யுளுக் கும் இடைப்பட்டது. அது. .

"பாவின் றெழுந்த கிளவி" என்பதுதான் வசனப்பரப் பின் பெரும் பகுதியைச் சுட்டுவதாக இருக்க வேண்டும். தொல்காப்பியர் காலத்தில் இந்த நான்கு வகை வசன நூல் களும் வழக்கில் இருந்தன. இலக்கண நூலொன்றில் தனி யாக வகைப்படுத்திச் சொல்ல வேண்டுமாயின் அதற்குத் தக்கபடி அவை மிகுதியாகவே இருந்திருக்க வேண்டும்.

பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புனர்ந்த நகைமொழி யானுமென்று உரைவகை நடையே நான்கென மொழிய என்று வரும் இந்தத் தொல்காப்பியச் சூத்திரத்திற்கு ஆதார மாகிய வசன நூல்களில் ஒரு சிறு பகுதிகூட நமக்குக் கிடைக்கவில்லை. . -

மற்றொரு விஷயம்: இந்தப் பகுப்பு, தொல்காப்பிய ராலே முதல் முதலாக அமைக்கப்பட்டது என்று சொல்வதற் கில்லை. அதற்கு முன்பே ஏற்பட்டதென்று தெரிகிறது. மேலே காட்டிய சூத்திரத்தில் நான்கென மொழிப' என்று தொல்காப்பியர் சொல்கிறார் நான்கு என்று சொல்வார் கள் என்பது அதன் பொருள். மொழிப' என்ற அடையாளம் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே இப்பாகு பாடு வழக்கத்தில் இருந்ததென்பதைக் குறிக்கிறது. அந்தக் குறிப்பைக் கொண்டே, அப்படி வகுத்த மிகப் பழங்காலத்தி