பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வசனத்துக்கு விஷயம் 61

லேயே, தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே, தமிழ் வசனத் திற்கு இலக்கிய மதிப்பு உண்டாகிவிட்டது என்று :ாம் சொல்லலாம் அல்லவா?

தமிழ் வசனத்துக்கு விஷயம்

ஒரு ராஜகுமாரன் ஓரிடத்தில் உலாவிக்கொண்டிருக் கையில் அவன் கண்ணில் மிகவும் நீளமாகவும் பளபளப்பாக வும் கறுப்பாகவும் ஒரு பொருள் தோன்றியது. யாருடைய தலைமயிரோ அப்படிச் சுருளாக அங்கே கிடந்தது. அதன் அழகைப் பார்த்தபோது அவனுடைய உள்ளம் ஒர் அழகிய மங்கையைச் சித்திரித்துப் பார்த்தது; இத்தகைய கூந்தலை உடையவள் ஒரு கட்டழகியாகத்தான் இருக்க வேண்டும்’ என்று அவன் உறுதியாக நம்பினான். -

அதை எடுத்துக்கொண்டு ஒரு சித்திரக்காரனிடம் போனான். அவன் சித்திரக்கலையின் வரம்பைக் கண்டவன். 'இந்த அழகியின் உருவத்தை எழுதிக் கொடு' என்று அவன் கையில் ராஜகுமாரன், தான் கொண்டு சென்ற தலை மயிரைக் கொடுத்தான். -

சித்திரக் கலைஞன் தலைமயிரைக் கொடுத்துவிட்டு அழகியின் படத்தைக் கேட்கிறானே!’ என்று ராஜகுமார னைப் பரிகாசம் செய்யவில்லை. அப்படியே செய்கிறேன்’ என்று ஒப்புக்கொண்டான். தனது சித்திர சாமர்த்தியத்தி னால் அந்த கூந்தலுக்கு ஏற்ற உருவம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்து ஓர் அழகியின் படத்தை அவன் வரைந்து கொடுத்தான். அதை வைத்துக்கொண்டு ராஜ குமாரன் உலகமெல்லாம் தேடிக் கடைசியில் அதேமாதிரி ஒருத்தி இருப்பதைக் கண்டு அவளைக் கல்யாணம் செய்து கோண்டானாம். -