பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

yoff கி. வா. ஜ. பேசுகிறார்

இழுக்க நின்ற அந்தக் காட்சி என் மனசிலே அப்படியே

பதிந்திருக்கிறது.' -

நண்பருக்கு இதில் நம்பிக்கை உண்டாகவில்லை. அவர் களே இந்த ஜோடி யென்பது உமக்கு எப்படித் தெரியும்?”

என்று கேட்கிறார்.

'ஏன் தெரியாது? அன்று கண்ட முகவெட்டு அப்படியே இருக்கிறதே. நான் எப்படி மறக்க முடியும்? இப்போதுதான் நன்றாகக் கவனித்தேனே! அப்பா என்ன ஆச்சரியம்! நினைக்க நினைக்க ஆச்சரியம் வளர்கிறது. எல்லாம் தெய்வத்தின் வினையாட்டு' இப்படிச் சொல்லி நிறுத்து கிறார் கிழவர்.

இது குறுந்தொகை என்னும் சங்க நூலில் உள்ள ஒரு காட்சி. இப்படியே பலவேறு இயல்புகளை விளக்கும் காட்சி களை அந்தக் காலத்து நூல்களிலே காணலாம்.

இனி, சரித்திரத்திற்கு வருவோம். தமிழில் சரித்திரத் தைப் பாதுகாப்பதில் சிரத்தை பல நூற்றாண்டுகளாக இல்லை. அது முக்கியமானதல்ல என்று கூடச் சிலர் கருதி யிருந்தார்கள். அந்தக் காலம் மலையேறிவிட்டது. சரித்திர மும் இலக்கியமும் இணையும் காலம் வந்துவிட்டது. தமிழ் நாட்டின் சரித்திரம் விரிந்தது. அரசர்கள் சரித்திரம், ஜமீன் தார்கள் சரித்திரம், ஸ்ம்ஸ்தானாதிபதிகள் சரித்திரம் இவை களைத் துப்புத்துலக்கி ஆராய்ச்சிக்காரர்கள் வெளியிடட் டும்; அவர்களோடு வசன எழுத்தாளர் சேர்ந்து அந்தச் சரித்திரத்திலிருந்து விஷயத்தை எடுத்துப் புதிய உருவம் கொடுக்கலாமே. மருதபாண்டியரென்ற ஜமீன்தார் சிவகங் கையில் இருந்து வந்தார். அவருடைய வீரத்தையும் தர்ம சிந்தனையையும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் கர்ண்பரம் பரையாக வழங்கி வருகின்றன. கட்டபொம்முவின் கதை யிலேதான் விரத்திற்குக் குறைவுண்டா? இவை சில . உதாரணங்கள். . . . . . . . . . .