பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வசனத்துக்கு விஷயம் 67

தலைமுறை தலைமுறையாகப் பாட்டிமார்கள் சொல்லி வருகின்ற கதைகளைத் தொகுத்து உருவாக்கினால் அந்தத் தொகுதி எவ்வளவு ருசியுள்ளதாக இருக்கும்! நாடோடிக் கதைகளில் இளங்குழ தைகள் கூடச் சொக்கி விடுகிறார் களே. வசன இலக்கிய சிருஷ்டியிலே அவற்றிலிருந்து எவ்வளவு சரக்கை எடுத்துக்கொள்ள autruË !

ஒவ்வோர் ஊரிலும் வழங்கும் பழைய கதைகளுக்குக் கணக்கே இல்லை. காதுடையவர்களும் கருத்துடையவர் களும் இந்தத் துறையில் வேலை செய்ய முற்பட்டால் அது சிறந்த இலக்கியத் தொண்டாக இருக்கும். இப்படிக் கேட்டு அறிந்த பல விஷயங்களை வைத்துக்கொண்டு தற்காலத் தமிழ்வசன ஆசிரியர்களில் முதல் ஸ்தானத்தை வகிக்கும் மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர் கள் அழகுபடுத்தி எழுதிய வரலாறுகளில் எல்லா வகை ரஸங்களையும் காண்கிறோமே. -

ஐயரவர்கள் துரத்துக்குடிக்குப் போயிருந்தபோது மீள விட்டானென்ற ஊரிலிருந்து ஒரு நண்பர் வந்திருந்தாராம், உங்கள் ஊருக்கு அந்தப் பேர் வரக் காரணம் என்ன? என்று ஐயரவர்கள் விசாரித்தார்களாம். அவர் சொல்லத் தொடங்கினார்: .

கம்பர் இந்த வழியே வந்திருந்தபோது ஒருநாள் விடியற் காலையில் எங்கள் ஊரில் ஒரு தோப்பில் தங்கினார். அங்கே சிலர் ஏற்றம் இறைத்து மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். தண்ணீர்ச் சாலைப் பிடிக்கிறவன் பாட்டுப் பாடிக்கொண்டே இறைத்தான். அவனுடைய பாட்டிலே கம்பருடைய கவனம் சென்றது. அதில் மனத் தைப் பறிகொடுத்தவராய் இருக்கும்போது ஏற்றக்காரன் ஒரு புதிய பாட்டைத் தொடங்கினான். --

மூங்கிலிலை மேலே . . . . என்று அவன் ஆரம்பித்தான். அதைச் சாவதானமாகப் பாடிவிட்டு, . - - . . . .