பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொச்சைத் தமிழ் 73

இது ஒரு நடை. இந்த நடை எல்லோருக்கும் விளங்கு கிறது. ஆனால் இதில் கொச்சை வார்த்தைகள் அதிகமாக இருக்கின்றன. காதலனுக்காக அவள் கார்ப்பதும், மல்லிகை பூர்ப்பதும், அவள் அதைக் கோர்ப்பதும் நல்ல காட்சிகளே. நாம் பேசும்போது கார்ப்பது, பூர்ப்பது, கோர்ப்பது என்னும் வார்த்தைகளை உபயோகிக்கிறோம். நம்முடைய பேச்சிலே எங்கிருந்தோ ஒரு-ர்-வந்து குதிக்கிறது. காப்பது, கார்ப்பது ஆகிறது; பூக்கிறது, பூர்க்கிறது ஆகிறது; கோவை சர்வ சாதாரணமாகக் கோர்வை ஆகிவிடுகிறது. ஆனால் அந்த வார்த்தைகளை எழுதுபவர்கள் அப்படியேதான் எழுத வேண்டுமா? -

'சுவற்றில் என்ற வார்த்தையை அடிக்கோருதரம் எழுத்தாளருடைய வசனத்தில் பார்க்கிறோம், 'சுவத்திலே ஆணி அடி என்றுதானே பேசுகிறோம்? அதை ஏன் எழுதக் கூடாது?’ என்று வாதம் செய்யவும் புறப்படுகிறார் எழுத் தாளர். நீங்களோ சுவத்திலே என்பதைச் சுவற்றிலே என்று மாற்றிக் கொள்ளுகிறீர்களே; இன்னும் சிறிது யோசித்து, சுவரிலே என்று சரியான வார்த்தையை எழுதி விடலாமே?” என்று கேட்டால், இலக்கணம் பேசுகிறான் என்ற கோபம் வந்து விடுகிறது.

'இப்படி, எடுத்ததற்கெல்லாம் இலக்கணம் பார்த்துக் கொண்டிருந்தால் இலக்கியத்தில் p வ ன் இல்லாமற் போகுமே? பேச்சிலே எப்படிப் பேசுகிறோமோ, அந்த மாதிரி எழுதினால் தான் சரியான பாவம் உண்டாகும்' என்று புதிய எழுத்தாளர் வாதிக்கிறார்.

ஜீவன் இல்லாமற் போனால் அதை விட இலக்கியத்திற்கு வேறு நஷ்டம் இருக்க முடியாது. ஜீவன் எதில் இருக்கிறது? பேச்சிலே வார்த்தைகள் எவ்வளவோ மாறி உருத் தேய்ந்து போகின்றன. அவைகளை அப்படியே உபயோகிப்பதென் ஹால் தமிழ்ப் பாஷை நூறு வருடங்களுக்கு ஒரு முறை புதிய