பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கி. வா. ஜ. பேசுகிறார்

கிழவர்கள் உட்பட எல்லோரும் கதைகள், நாவல்கள் வாசிக் கிறார்கள். சாயங்காலம் ஆனாலோ, சமாசாரப் பத்திரிகை கள் எல்லாவற்றிலும் தமிழ் வசனம்,

இப்படிக் காலை முதல் மாலை வரையில் தமிழ் வசனத் திலே உலவி வருகின்ற நமக்கு, நம் மொழி எவ்வளவோ முன்னுக்கு வந்துவிட்டது. எத்தனை இடங்களில் எத்தனை விதமாகத் தமிழ் வசனம் விளங்குகிறது!’ என்ற எண்ணம் உண்டாகிறது.தமிழ் வசனம் இருக்கிறதென்பது வாஸ்தவம்: உண்மையிலே அது விளங்குகின்றதா. தமிழ் மொழிக்குப் பெருமை உண்டாகின்றதா என்பது வேறு விஷயம்.

விளம்பரம், பத்திரிகைகள், கதைகள், கட்டுரைகள் எல்லாவற்றிலும் வசனம் இருக்கிறது. வாழ்க்கையைச் சித் தி: ரித்துக் காட்ட வேண்டுமென்ற ஆவலோடு எவ்வளவோ எழுத்தாளர்கள் முயலுகிறார்கள்.

'நனந்தலை யுலகில் தண்கதிர் சுருக்கிக் கதிரவன் குட திசை மாய, முண்டகம் இதழ் குவிய, முல்லை மலர் வாய். மலர, யாண்டும் தன் கதிர் பம்ப, விசும்புமிசை இவர்ந்தது. திங்கள்' என்று ஒரு தமிழ்ப் புலவர் எழுதும்போது அர்த்தம் விளங்காத செய்யுளைக் கேட்பதுபோல் இருக்கிறது. மறு. முறை-ஏன்?- பல முறைகள் படித்துப் பார்த்து அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டி யிருக்கிறது. இந்த நடையில் சிறிதேனும் பிழையில்லை. ஆனால் படித்த மாத்திரத்தில் மனதைக் கவரும் தெளிவும் இல்லை.

"அவள் தன் காதலனுக்காகக் கார்த்துக் கொண்டு நிற். கிறாள். பந்தலில் பூர்த்த மல்லிகையும், சுவற்றின்மேல் ரோஜாப்பூவும் இருக்கிறது. மல்லிகைப் பூவைப் பறிச்சுக் கோர்த்தாள். ரோஜாப் பூவைப் பறிச்சு முகர் ந்தாள். அகண்ட கண்களால் நாலா பக்கமும் பாத்துண்டே எப்போ வருவாரோ என்று ஏங்கி நின்றாள்.'