பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொச்சைத் தமிழ் 7r

ஒருவர் சொல்லும்போது அது தான் உண்மையாகத் தோன்றுகிறது. ஆனால், எனக்கு ஒன்று தோன்றுகிறது: உங்கள் அபிப்பிராயத்துக்குப் பொருத்தமா யிருந்தால் வைத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால்...நான் சொல்லு வானேன்? உங்கள் இஷ்டம். . ‘. . . . - அவர் முதலில் இராமாயணம் தமிழ் நாட்டில் எந்த திலையில் இருக்கிறதென்று பார்ப்பார். ஒலைச்சுவடியில் எழுத்தாணியை ஒட்டி எழுதிய காலத்தில் வாழ்ந்த அவருக்கு, கம்பராமாயணப் புஸ்தகம் ஆயிரக்கணக்காகத் தமிழ் நாட்டில் அச்சில் பதிப்பித்து வெளிவந்து உலவுவதைக் கண்டால், அடே, இது என்னடா பெரிய ஆச்சரியம்: என்று வியந்து போவார். இப்போது நாம் வெகு சுலபமாக வாங்கிப் படித்து வரும் புஸ்தகம் அவருக்கு முதலில் ஆச்சரி யத்தை உண்டாக்கும்.

மொழியின் சரித்திரத்தில் அச்சு யந்திரம் உண்டாக்கின மாறுதல் மிகவும் பெரிது; அதிக ஆச்சரியமானது. கண்முன் னால் நடப்பதால் அதன் மதிப்பு உள்ளபடியே நமக்குத் தெரியவில்லை. அச்சு யந்திரமும் அதனால் வெளிவரும் அஸ்தகங்களும் இல்லாவிட்டால், நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வசனம், செய்யுளுக்கு உரைகாணும் அளவோடு தின்றிருக்கும். இலக்கணமென்றால் சூத்திரங்கள், இலக்கிய மேன்றால் செய்யுட்கள் என்ற பழைய நிலைக்குக் கேடு இல்லாமல் தமிழ் இருந்திருக்கும். -

இப்போது பாருங்கள்: தமிழ் வசனத்துக்கு எத்தனை ஆயோகங்கள் காலையில் எழுந்திருந்தால் நம் தெருவில் புதிதாக வைத்திருக்கும் வெண்ணெய்க் கடையைப் பற்றி யுள்ள விளம்பரத்தை ஒரு பையன் தம் முகத்தில் விசிறி எறிந்துவிட்டுப் போகிறான். வீதியிலே சினிமா விளம்பரங் க்ள் கதைச் சுருக்கத்தோடு தம் கையில் துறுத்தப்படுகின்றன. தபால் நேரத்தில் நண்பர்களிடமிருந்து கடிதங்கள் வருகின் றன. ஒழிந்த நேரங்களிலெல்லாம், பெண்கள், குழந்தைகள்