பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கி. வா. ஜ. பேசுகிறார்

இந்த அடியை, இந்த பாவத்தை நாம் தலை தோவ யோசித் தோம்; வரவில்லையே!” என்று எண்ணி அவர் வெட்கம் அடைந்தார். மேலே, தாம் நினைத்த இடத்திற்குச் செல்ல அவருக்கு மனம் வரவில்லை. அவர் மீளப் போய் விட்டார். அவரை மீளவிட்ட இடம் இது. அதனால்தான் மீளவிட் டான் என்ற பெயர் வந்தது.

இவ்வாறு அந்த நண்பர் சொன்னாராம். இதைப் போன்ற ரஸ்மான வரலாறுகளைத் தொகுத்து எழுத எழுத்தாளர்கள் முற்பட்டால் வசனத்துக்குச் சரக்கு இல்லை' என்று குறை கூறுவது நிச்சயமாக ஒழிந்துவிடும்.

கொச்சைத் தமிழ்

கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர் மறுபடியும் பிறந்தால் அவர் ஞாபகம் எதிலே அதிகமாகச் செல்லும்? எந்த விஷயம் அவருக்கு அதிக ஆச்சரியத்தைக் கொடுக்கும்?

அவர் காலத்தில் இல்லாத புதிய பொருள்களைப் பார்த்து அவர் ஆச்சரியப்படுவார் என்பது நிச்சயம். ஆனால் எந்தப் புதிய பொருள் அவர் கண்களை முதலில் கவரும், தெரியுமா? 'மின்சார விளக்குத்தான்' என்று ஒருவர் சொல்லலாம். 'இல்லை, இல்லை, ரயில் வண்டி தான் அவருக்கு முதலில் ஆச்சரியத்தை உண்டாக்கும்' என்று மற்றொருவர் சொல்வார். அவர் இராமாயணத்தில் கற்பனை செய்து சொல்லி யிருக்கிறாரே, அந்த வான ஊர்தி இப்போது ஆகாச விமானமாக வந்திருப்பதைப் பார்த்துப் பிரமித்துப் போவார்" என்று முடிவு கட்டுபவர்களும் இருக் கிறார்கள். ஒன்றும் சரியல்ல; ரேடியோப் பேச்சைக் கேட்டாரானால் இதைக் காட்டிலும் ஆச்சரியமாவது ஒன்றுமே இல்லை யென்று சத்தியம் செய்வார்' என்று