பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வசனத்துக்கு விஷயம் 69.

நாள் விடியற்காலையில் அங்கே வந்தார். நல்ல வேளையாக அன்று ஏற்றம் இறைப்பவர்கள் வந்திருந்தார்கள். சால் பூட்டியாகிவிட்டது. சால் பிடிப்பவன் கனைத்துக்கொண். டான். கம்பர் காதை நெறித்துக்கொண்டு கேட்டார். ஆண்டவனே, இவன் அந்தப் பாட்டை ஆரம்பிக்க வேண்டும்' என்று கூட வேண்டிக் கொண்டிருப்பார்.

ஏற்றப் பாட்டு ஆரம்பமாயிற்று.

மூங்கிவிலை மேலே துரங்குபணி நீரே என்னும் பகுதியை அவன் தன் வழக்கப்படி பாடி முடிப்பதற். குள் கம்பருக்கு ஆத்திரம் பொறுக்க முடியவில்லை. அடுத்த அடிகூட அவருக்குத் தெரிந்ததுதானே? அதையும் ஏற்றக் காரன் நிதானமாகப் பாடினான்: - தூங்குபனி நீரை. இனிமேல்தான் புதையல் கிடைக்கப் போகிறதென்று கம்பர் ஆவலாய் நின்றார். பாவம்! ஒரு சிறிய பாட்டின் ஒரடியின் அழகு தெரிவதற்கு அவர் ஒருநான் முழுவதும் காத்திருந்தாரென்றால் அவருடைய ஆசை எவ்வளவு அதிக மாக இருக்க வேண்டும்!

தூங்குபனி நீரை என்கிறான் தண்ணிர் இறைப்பவன். தெரியுமப்பா; மேலே சொல்லு' என்று சொல்விக்கொள்கிறார் கம்பர், மறுபடியும் தடங்கல் வரக் கூடாதே யென்பது அவர் பிரார்த்தனை.

துரங்குபணி நீரை வாங்குகதி ரோனே. கம்பர் துள்ளிக் குதித்தார். 'என்ன அழகு! மூங்கில் இலையையும் பணித் துளியையும் கதிரவனையும் பொருத் திக் காட்டும் இதில் எவ்வளவு அழகுணர்ச்சி ததும்புகிறது:

இ-5