பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொச்சைத் தமிழ் 75

வில்லை. அதனால் நாமும் அதுகளைப் பிரயோகம் செம்' லாமா? இல்லை, அவைகளை விலக்க வேண்டுமா? விலக்கித் தெளிவான மொழியில் பிழையில்லாமல் எழுதுவதில் அ99 இராதா?

பேச்சு வழக்கைப் பின்பற்றினால் இயல்பான அழகு ஏற்படுகிறதென்பதில் ஒரளவு உண்மை இருக்கிறது. பேச்சு வழக்கைப் பார்த்தாலோ, அதற்கு ஒரு வரையறை இல்லா மல் ஊருக்கு ஒரு மொழியாகவும் காலத்துக்கு ஒரு மொழி யாகவும் மாறிக்கொண்டே வருகிறது. எழுத்துத் தமி9ை ஒரே அடியாகக்கொச்சைத் தமிழ் நிலைக்குத்தள்ளிவிடுவதை விடக் கொச்சைத் தமிழை மாற்ற முற்படுவது உபயோக மான காரியம். வாழ்க்கையில் எண்ணங்களும் செயல்களும் இழிவாக இராமல் உயர்தரமாக இருப்பதை நாகரிகமாக அறிஞர்கள் கருதுகிறார்கள். அதற்கு ஏற்றபடியே, பேச்சு? கொச்சைத் தன்மை ஒழிந்து தெளிவாகவும் பிழையின்றியும் அமைதலே பொருத்தமாகும்.

கொச்சைத் தமிழைக் கணக்கு வழக்கில்லாமல் எழுத் திலே உபயோகப்படுத்தி வந்தால் இலக்கியத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் உள்ள வித்தியாசம் அதிகமாகி, இரண்டும் வெவ்வேறுமொழியாகிப்போனாலும் போகலாம்: அத்தகைய அபாயம் வராமல் காப்பாற்றுவதற்குப் பேசும் தமிழில் கொச்சை வார்த்தை பலவற்றிற்கு விடை கொடுத்துவிட்டு அதன் நடையைச் சிறிது உயர்த்தவேண்டும். இப்படி எழுத்திலும்பேச்சிலும்கொச்சைத்தமிழின் உபயோகத். துக்கு வரையறை ஏற்படுமானால், இப்பொழுது இவ்விரண் டுக்கும் இடையே உள்ள வித்தியாசமும், அதனைப் போக்க முயல்பவர்கள் சங்கடங்களும் வரவரக் குறைந்து விடும்.