பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் டு ைர

நான் மூன்றாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந் தேன். அப்போது வகுப்பாசிரியர் தமிழ் வியாசம் எழுது வதற்கு விஷயம் கொடுத்தார். ஒரே ஒரு வியாசத்தின் பெயர் மாத்திரம் இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. . ‘விளக்கெண்ணெய் என்ற தலைப்பில் ஒரு வியாசம் எழுதும்படி அவர் கட்டளையிட்டதோடு அதற்கு வேண்டிய குறிப்புக்களையும் கொடுத்தார். அவர் சொல்விக் கொடுத்த சவிளக்கெண்ணெய்”க் கட்டுரை எப்படி இருந்ததோ அது கடவுளுக்குத்தான் வெளிச்சம். -

விளக்கெண்ணெயைப் போன்ற பல விஷயங்கள் உபாத்தியாயர் உபதேசத்தால் எழுதினோம். ஒன்றாவது மனசில் தங்கவில்லை. காரணம் அந்தப் பெயரைப் போலவே விஷயங்களும் வழவழ கொழ கொழாவா யிருந்ததுதான். - அந்தக் காலத்தில் அதற்கு வியாசம்’ என்று பெயர். மேல் வகுப்பிற்கு வந்தால் அது காம்போளtஷன்" என்ற வேறு ஆங்கிலப் பெயரால் கெளரவத்தை அடைகிறது. பள்ளிக்கூடத்தை விட்டு வந்தால் பத்திரிகை உலகத்தில் கட்டுரை என்ற பட்டம் அதற்குக் கிடைக்கிறது.

பள்ளிக்கூடத்துப் பையன் எழுதுகிற வியாசம், மேல் வகுப்புப் பிள்ளைகள் எழுதுகிற காம்போலிஷன், பத்திரிகை களில் வரும் கட்டுரை ஆகிய எல்லாம் ஒரே ஜாதி; கட்டுரை ussär இனம். ஆனால் எல்லாம் கட்டுரைகளாக இருக் இன்றனவா என்பது வேறு விஷயம். .

இலக்கியத்தில் பலவேறு வகைகளில் கட்டுரை ஒன்று. கதை, கவிதை முதலிய வேறு பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைப் பள்ளிக்கூடத்தில் உற்பத்தி பண்ணும்படி சொல்லிக் கொடுக்கிறதில்லை. அதனால் ஆசை உள்ளவர்