பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ ட் டு ைர 77

கள் அந்தத் துறைகளில் ஈடுபட்டு இலக்கிய சிருஷ்டி செய்கி றார்கள். - .

தமிழ் நாட்டில் இப்போது உற்பத்தியாகி யிருக்கும் இலக்கியத்தில் நூற்றுக்குத் தொண்ணுாறு பங்கு கதைகளே: பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்பு முதல் பி. ஏ. வகுப்பு வரையில் கற்றுக்கொள்வதோ கட்டுரை எழுத. ஆனால் இன்று தற்காலத் தமிழிலக்கியத்தில் முக்கியமான குறை நல்ல கட்டுரைகள் அதிகமாக இல்லாமையே. பள்ளிக் கூடச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுக் கற்றுக்கொண்ட சரக்கு ஒன்றும் வாழ்விலே பிரயோசனப்படுவதில்லை என்ற அபக்கியாதிக்கு இந்தக் கட்டுரையும் சாட்சி சொல்கிறது. அதற்கு நாம் என்ன செய்வது! கல்வியின் கோணலோ, கட்டுரையின் கோணலோ 1 艇

கோணல் எங்கே இருந்தாலும் சரி, நமக்கு அழகான கட்டுரை கிடைப்பதில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒன்றுமே இல்லை என்று துக்கப்படும் நிலையில் நாம் இருக்க வில்லை யென்பதை நினைக்கும்போது நமக்குச் சிறிது திருப்தி உண்டாகிறது. தமிழ் நாட்டில் பத்திரிகைகள் ம வி ய ம லி க் கட்டுரைகள் உதயமாகிக்கொண்டு வருகின்றன. - . . வாசிக்கும்போது மனசை இழுத்துக்கொண்டு செல்வது எதுவாயிருந்தாலும் அதை இலக்கியமென்று சொல்லிவிட லாம். இலக்கியத்தின் பயன் ஆனந்தம். கட்டுரையை இலக்கியமாகச் செய்ய வேண்டுமென்றால் அது கவர்ச்சியும் இன்பமும் உடையதாக இருக்க வேண்டும். -

கட்டுரையில் முக்கியமாக மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும் (1) விஷயம், (2) அமைப்பு, (3)நடை. இந்த மூன்றும் ஒன்றைவிட ஒன்று முக்கியமானவை. நன்றாக எழுதும் ஆற்றல் படைத்த ஒர் எழுத்தாளன் எந் த. விஷயத்தைப் பற்றியும் ரஸ்மாக எழுதிவிடக் கூடும்.