பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7め கி. வா. ஜ. பேசுகிறார்

இரண்டாவது அமைப்பு. இதுதான் கட்டுரையின் ஜீவன். படிக்கிறவனுக்குச் சிரமமே தெரியாதபடி ஒன்றன் பின் ஒன்றாக விஷயங்களைப் பரிமாறும் முறை இருக்கிறதே அதில்தான் எழுத்தாளனுடைய உலகியல் அறிவும் எழுத்துத் திறமையும் வெளிப்படும். மேல்நாட்டுக் கட்டுரை எழுத் தாளர்களிடத்தில் காணப்படும் சிறந்த இயல்பு இதுதான். சிலர் தலைப்புக்குச் சம்பந்தமே இல்லாமல் விஷயத்தை ஆரம்பிப்பார்கள். படிப்பதற்கு மிகவும் ருசியாக இருக்கும். படிக்கப் படிக்க நம் சிந்தை அதனுள் ஆழ்ந்துவிடும். முடிக் கிறபோது ஒரு திருப்தியும் இன்பமும் அடைவோம்.

மூன்றாவது நடை. நடையில் ஒவ்வொருவரின் தனி இயல்பையும் காணலாம். சாதாரணமாக, நடக்கும் நடையி, விருந்து ஒருவரைக் கண்டுபிடித்து விடுகிறோமே; அது போலவே எழுத்து நடையிலிருந்தும் ஒருவரைக் கண்டு. பிடித்து விடலாம். அழகான நடையென்றால் இன்ன தென்று வரையறுத்துச் சொல்ல முடியாது. தெளிவான நடையில் தமிழ் எழுத எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். ஆனால் ஒரு பெருங் குறை இன்னும் தீர்ந்தபாடில்லை. குற்றமற்ற நடை வேண்டுமென்ற நினைப்புப் பலருக்கு இருப்பதில்லை. ஆங்கிலம் முதலிய மொழிகளில், நடையில் விறுவிறுப்பையும் அழகையும் எப்படிப் போற்றுகிறார். களோ, அப்படியே குற்றமில்லாமல் இருக்க வேண்டு மென்ப திலும் அதிகக் கவனத்தைச் செலுத்துகிறார்கள்.

கட்டுரைகளில் பலவகைகள் இருக்கின்றன. இனிய மென்மையான் ஹாஸ்யச் சுவை கலந்து ஆழ்ந்த கருத்து ஒன்றும் இல்லாவிட்டாலும் படிக்கப் படிக்க ரஸ்முள்ளவை. ஒரு வகை. ஆங்கிலத்தில் கார்டினர் முதலிய சிலருடைய கட்டுரைகள் இந்த வகையைச் சேர்ந்தவை. தமிழ் நாட்டில் அவரைப் பின்பற்றி எழுதுபவர்களில் ஒருவராகத் தி. ஜ. ர வைச் சொல்லலாம். கருத்து இருந்தாலும் அக்கருத்தைக்