பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாடோடிப் பாடல்கள் & 호

களைக் கடன் வாங்கியாவது திணித்தும், மேற்கோள்களை நிரப்பியும் எழுதும் வழக்கம் இப்போது மாணாக்கர்களிடம். இருக்கிறது. அது முதலில் ஒழிய வேண்டும். விஷயத்தில் குறை இருந்தாலும் அது பெரிதன்று எழுதின அளவில் திருத்தமாகவும் பொருத்தமாகவும் இருக்க வேண்டும். எந்த விஷயத்தைப்பற்றியும் பூரணமாக எழுதி விடுபவர் யாரும் இல்லை. அறிவுக்கு வரம்பிட முடியாது. அறிவு வளர வளர விஷய ஞானமும் அதிகமாகும். ஆகையால் தெரிந்த விஷயத்தை அழகாகவும் குற்றம் இல்லாதபடியும் எழுதிப் பழகவேண்டும். அந்த எழுத்திலே கவர்ச்சி இருக்கவேண்டும். நடையில் எளிமையும் தெளிவும் வேண்டும். இந்தக் கருத். தோடு கட்டுரை எழுதுவதற்குப் பழகினால் இன்றைய. மாணாக்கர்களே நாளைய எழுத்தாளர்களாக வருவார் களென்று சொல்வதற்குத் தடையில்லை. அப்படி எழுதி: னால் விளக்கெண்ணெயைப்பற்றி எழுதினாலும் தேனைப் போல அனுபவிக்கலாம். - - -

நாடோடிப் பாடல்கள்

மாணிக்கவாசகர் சிவபெருமான் கோயில் கொண்டிருக் கும் ஸ்தலங்களுக்கெல்லாம் போய் இறைவனைத் தரிசித்து. ஆனந்தத்தால் பல அழகிய பாடல்களைப் பாடிக்கொண்டு. வந்தார். அனுபவம் கனிந்த பாடல்களை உருகி உருகிப் பாடினார். சிவபெருமான் புகழை எத்தனை எத்தனையோ மாதிரியாகப் பாடினார். . -

ஒரு ஸ்தலத்திலே ஸ்வாமி தரிசனம் செய்து கொள்வ. தற்குமுன் அந்த ஸ்தலத்தில் நீராட எண்ணிச் சென்றார். நீர் நிரம்பி அல்லி மலர்கள் நிறைந்து பார்ப்பதற்கு மிகவும்: அழகாக இருந்தது அந்தப் பொய்கை, நீராடாமலே அதன்