பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,霸多 கி. வா. ஜ. பேசுகிறார்

கரையில் நின்று அந்த அழகிய காட்சியைப் பார்த்து இன்புற்றுக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சிறு கூட்டம் அங்கே வந்து மளமளவென்று நீரில் இறங்கி அல்லி மலர்களைப் பறிக்க ஆரம்பித்தது. அவ்வளவு பேரும் இளம் பெண்கள். - -

மிகவும் உற்சாகத்தோடே அவர்கள் பூக்கொய்யத் தொடங்கினார்கள். வெறுமனே கொய்யவில்லை. தம் இனிய குரலினால் பாட்டுப் பாடிக்கொண்டே اساسا (تت دارم. கொய்தார்கள். கண்ணாலே அழகைப் பருகி இன்புற்று தின்ற மாணிக்கவாசகர் அப்பெண்களுடைய பாட்டின் இசை இலும் மனத்தைப் பறிகொடுத்து நின்றார். நெடுநேரம் இப்படி நின்றவர் அந்தப் பாட்டின் அமைப்பை நன்றாக உள்ளத்தில் வாங்கிக்கொண்டு அந்த மாதிரியே தாமும் பாட ஆரம்பித்தார். அல்லி மலர் கொய்யும் அந்தப் பெண்களுக் குள் ஒருத்தியாகத் தம்மைப் பாவித்துக் கொண்டார். -

இணையார் திருவடி என்றலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந் * - • * தேன்

அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற புனையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ!

என்று பாட ஆரம்பித்தார். இப்படியே பத்துப் பாட்டுக் களைப் பாடினார். திருவாசகத்தில் திருப்பூவன்லி என்னும் பெயரோடு இந்தப் பாட்டுக்களை இன்றும் பார்க்கலாம்.

மானிக்கவாசகர் பாடல்கள் சைவத் திருமுறையிலும் இலக்கிய வரிசையிலும் சேர்ந்திருப்பதால் அவை ஏட்டுச் சுவடிகளில் இடம் பெற்றுப் பிறகு புஸ்தக ரூபத்தில் வந்து இன்றளவும் பக்தர்களாலும் புலவர்களாலும் படித்துப் விாராயணம் செய்யப்படுகின்றன. ஆனால் அத்தப் பெரியார் எந்தப் பாடல்களைக் கேட்டுத் திருப்பூவல்லி வாடும் உணர்ச்சியைப் பெற்றாரோ, அந்த மூலப்பாடல்கள்