பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடோடிப் பாடல்கள் 83

இன்று இல்லை. நாடோடியாகக் காற்று வாக்கிலே வழங்கி வந்த அவை காற்றோடு கலந்து மறைந்து போயின.

மாணிக்கவாசகர் இந்தமாதிரியே பெண்கள் விளையா டும் போது பாடும் பாட்டுக்களைக் கவனித்து அவற்றைப் போலப் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். இவர் மாத்திர மல்ல; வேறு புலவர்களும் அத்தகைய பாடல்கள் பாடியிருக் கிறார்கள். அவற்றை நாம் இலக்கியமாகக் கொண்டு படித்து வருகிறோம். அந்தப் பாடல்களுக்கு உருவத்தை த்தந்த மூலப்பாடல்களாகிய நாடோடி இலக்கியத்தை நாம் நழுவ விட்டுவிட்டோம்; வழக்கில் உள்ளவற்றைக் கவனிப்பதும் இல்லை. .

பாரதியார் அவற்றைப் புறக்கணிக்கவில்லை; காது கொடுத்துக் கேட்டார். நெஞ்சைப் பறி கொடுத்தார். குயிற். பாட்டில் சொல்கிறார்:

ஏற்றதிர்ப் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும் கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும் சுண்ணம் இடிப்பார்கஞ் சுவைமிகுந்த பண்களிலும் பண்ணை மடவார் பழகு.பல பாட்டினிலும் வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாயொலித்து கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும் ............நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன். வயல்களிலே ஏற்றம் இறைக்கும்போது ஏற்றக்காரன் பாடும் பாட்டை முதலிலே வைத்திருக்கிறார் பாரதியார்.

நிறப்பாட்டிற்கு எதிர்ப்பாட்டில்லை" என்று தமிழ்ப் பழ மொழி சொல்கிறது. ஏற்றப் பாட்டுக் கச்சேரிக்கு வானமே பந்தல்; பூமியின்மேல் பச்சைக் கம்பளம் விரித்தாற்போலப் பரந்து படர்ந்துள்ள வயற்பரப்பிலே நிலைக்களம். கிறிச் சிட்டுக் கொண்டு மேலுங்கீழும் எழும்பித் தாழும் ஏற்றந் தான் பக்க வாத்தியம். நீர்ச்சால் தண்ணிரில் மொள்ளும் போது உண்டாகும் சலக்கென்ற ஓசையே தாளம். சால்