பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கி. வா. ஜ. பேசுகிறார்.

பிடிப்பவன்தான் தலைமைப் பாடகன். அவன் பாடும். பாட்டைப் பாரதியார் கேட்டு அதன் இசையிலும் பொருளி ஆம் மயங்கி நின்றார். நாமும் கவனித்தால் மயங்கி நிற்போம். காதலும், வீரமும், சோகமும், ஹாஸ்யமும் அந்தப் பாட்டிலே கலந்து வரும். புராணமும் புதுமையும், வருணனையும் வாழ்க்கைக் காட்சிகளும், வேடிக்கையும் வேதாந்தமும் விரவிவரும். புலவர்கள் பாடும் இலக்கியத். தைப்போலச் செந்தமிழும் பொருள் நயமும் அலங்காரமும் அதில் அதிகமாக இல்லாவிட்டாலும் அதற்கு அமைந்த. எளிமையழகு உண்டு. பலபல வண்ணங்கள் மலிந்த மலர் மாலைகள் இல்லை; ஆனால் உள்ளங் கொள்ளை கொள்ளும் சின்னஞ் சிறிய காட்டு மல்லிசைகள் உண்டு. .

திருப்பூவல்லி கொய்யும் பெண்ணாகத் தம்மை வைத்து மாணிக்கவாசகர் பாடிய செய்யுளை முன்னே கேட்டிர்கள். ஏற்ற இலக்கியத்தில் மலர் பறிக்கும் பாட்டு ஒன்றைக் கேளுங்கள். -

எட்டிப்பறி பூவை விட்டுவிடு அரும்பை தாவிப்பறி பூவை தள்ளிவிடு அரும்பை ஒடிப்பறி பூவை ஒதுக்கிவிடு அரும்பை தள்ளிவிட்ட அரும்பு தானாய்மல ராதோ ஒதுக்கிவிட்ட அரும்பு உடனேமல ராதோ - பூவைப்பறியேனோ புள்ளையார்க்குச் சாத்த காயைப்பறிப் பேனோ கந்தருக்குச் சாத்த மொக்கைப் பறிப் பேனோ விக்னருக்குச் சாத்த

微必·罗峰曾 受影堡

முல்லையறி பெண்ணே முன்மடியைக் கோவி தாவிப்பறி பெண்ணே தளர்மடியைக் கோலி முல்லையுஞ் சிறிசு முன்மடியும் பொத்தல் மல்லிகை பெரிசு மார்மடியும் பொத்தல். - . பாரதியார் ஏற்றப் பாட்டோடு தெல்லிடிப்பவர் கண் னாம்பு இடிப்பவர் பாடும் பாடல்களையும் கும்மி முதலிய