பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடோடிப் பாடல்கள் 85。

பாடல்களையும் சேர்த்துச் சொல்கிறார். அவற்றையேல் லாம் பாமரர் பாட்டுக்களென்று (Folk Songs) மேல்நாட் டார் வழங்குகின்றனர். -

குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப் பாடல்களும் இந்த வகையைச் சேர்ந்த வகைகளே. சிலப்பதிகாரத்தின் உரையில் அடியார்க்கு நல்லார் அவற்றைப் பல்வரிக் கூத்து என்று குறிக்கின்றார். நூற்றுக்கு மேற்பட்ட பெயர்களை வரிசையாக அடுக்கிச் சொல்லும் ஒரு பாட்டை அங்கே மேற்கோளாகக் காட்டுகிறார். அதில் சொல்லப்படும் விளையாட்டுக்களுள் கொந்தி, பாண்டி, பாம்பாட்டி, காமன் சிந்து, சித்து, குரவை, கிள்ளுப்பிறாண்டி, அம்மனை, பந்து, கழங்காடல், பல்லாங்குழி, பள்ளி முதலிய சிலவகையான விளையாட்டுக்களே இக்காலத்தில் உள்ளன. தொல்காப்பி யத்தில் பண்ணத்தி என்று ஒருவகைப் பாட்டைப்பற்றிய செய்தி வருகிறது. அது பாட்டும் உரையும்போல இருக்கு மென்றும், எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புக்களை உடையதென்றும் தெரிகிறது. வஞ்சிப் பாட்டு, மோதிரப் பாட்டு, கடகண்டு என்ற மூன்று பாட்டின் பெயர்களை உதாரணமாகக் காட்டுகிறார் பேரா சி ரி ய ர் என்ற உரைகாரர். எழுதும் பயிற்சி இல்லாத தென்பதையும் மற்ற இலக்கணங்களையும் கவனித்தால் அது நாடோடிப் பாட்டாக இருக்கலாம் என்று தோற்றுகிறது.

தொல்காப்பியரோ, பாரதியாரோ யார் சொல்லியிருந்: தால் என்ன? நாம் அந்தப் பாடல்களை மதிப்பதில்லை. கேட்பதும் இல்லை. கேட்டாலல்லவா பாதுகாக்க வேண்டும். என்ற உணர்ச்சி தோன்றும்? -

மற்ற மொழிகளில் நாடோடிப் பாடல்களைச் சேகரிக் கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பல தொகுதிகளும் வெளிவந்திருக்கின்றன. தமது மொழியில்- இனிமேலா

இ- 6