பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 கி. வா. ஜ. பேசுகிறார்

வது தொகுக்க வேண்டுமென்னும் ஆ ைச பிறந்தால் நல்ல காலம் என்று எண்ணிக் கொள்ளலாம்.

இனி தாடோடிப் பாடலின் ருசியைக் கொஞ்சம் பார்க் கலாம். அதிலே உள்ள கவிதைக்கு உதாரணம் வேண்டுமா? சிறிது கேளுங்கள் :

தென்னை மரத்துப் பானைக்குள் ளேரெண்டு

தேரை இருந்து முழிக்குதுபார்

தென்ன லடிக்குது என்னை மயக்குது தேன்மொழி யேமுத்து வீராயி !

சாந்துப் பொட்டடி நானுனக்குச்

சவ்வாதுப் பொட்டடி நீ எனக்குச் சாந்துப் பொட்டுக்கும் சவ்வாதுப் பொட்டுக்கும்

சம்மத மோமுத்து வீராயி.

முல்லை அரும்படி நீயெனக்குச் சின்ன முக்குத்தி நத்தடி நானுனக்கு முல்லை யரும்புக்கும் மூக்குத்தி நத்துக்கும்

மோசமுண் டோமுத்து வீராயி.

இந்தப் பாட்டுக்களைத் திருப்பித் திருப்பிச் சொல்லி அனுபவிக்க வேண்டுமேயல்லாமல் வியாக்கியானம் செய்து கொண்டிருந்தால் ரஸ்மே தோன்றாது. ஹாஸ்ய ரஸத்தைக் கொஞ்சம் ருசி பாருங்கள்:- -

காலிலே பாடகங் கிலுக்குதடி-தங்கமே இடையிலே சேலை இழுக்குதடி-தங்கமே காதிலே தோடு கனக்குதடி-தங்கமே முக்கிலே தோடு மினுக்குதடி-தங்கமே எல்லாம் சரிதானடி-தங்கமே இடதுகண்தான் பொட்டையடி. -