பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கி. வா. ஜ. பேசுகிறார்

கிறீர்கள்? இல்லவே இல்லை. அவன் கன்னத்திலே ஓர் இடி இடித்து, இந்தப் புத்தி கெட்ட மகன்' என்றல்லவா அவள் சொல்லி யிருக்க வேண்டும்! -

திருமாலைப்பற்றிக் குழந்தைக்குச் சொல்லுகிறது ஒரு

பாட்டு. சங்குச்சக்கரச்சாமியின் புகழைக் குழந்தையுள்ளத் திலே ஆச்சரியம் உண்டாகும்படி சொல்வதாக அந்தப் பாட்டு அமைந்திருக்கிறது :

சங்குச் சக்கரச் சாமி வந்து

சிங்குச் சிங்கென ஆடுமாம்-அது

சிங்குச் சிங்கென ஆடுமாம். (சங், கொட்டுக் கொட்டச் சொல்லுமாம்-அது கூத்து மாடப் பண்ணுமாம். (சங்}

உலகமூணும் அளக்குமாம்-அது ஓங்கி வானம் பிளக்குமாம். (சங்), கலகலென்று சிரிக்குமாம்-அது காணக் காண இனிக்குமாம் (சங்): இந்தப் பாட்டைக் கேட்கும்போது குழந்தை தன்னை மறந்து சிங்குச் சிங்கென ஆடிப் புறப்பட்டு விடுமே!

இன்னும், தத்துவ ஞானம் வேண்டுமானால் நாடோடிப் பாடல்களிலே எவ்வளவு ரஸ்மாகச் சொல்லியிருக்கிறது, கேளுங்கள். . g

துரங்கையிலே வாங்குகிற மூச்சு-மேலே சுழிமாறி வாங்கையிலே போனாலும் போச்சு. சுழல்கின்ற பம்பரக் கட்டை-விசிறித் தூங்கையிலே கயிறறுந் தாலோ லொட லொட்டை பணமென்ற ஆஸ்தியை நம்பி-மெத்தப் - - பலநாளுத் தலைகீழாய் விழுகாதே தம்பி.

இப்படியே எல்லாவிதமான ரஸங்களையும் عr3 –rهنا وا