பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறி சொல்லுதல் 89

பாடல்களிலே காணலாம். கேட்கக் காதும் சிந்திக்க உள்ளமும் வேண்டும். அதோடு விடாமல் கூடியவரையில் எல்லாவற்றையும் .ெ தா. கு த் து ப் பாதுகாக்கும் காரியத்தையும் செய்ய வேண்டும்.

- குறி ക്സേ

மனிதனுக்கு எத்தனையோ ஆசைகள் இருக் இன்றன. வருங்காலத்தில் இன்னும் நல்ல நிலைபெற்று வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறான். ஒவ்வொருவனும் தன் வாழ்க்கையில் சுகமும் துச்சமும் கலந்துதான் அனுபவிக் இறான். சென்று போன நாட்களிலே அனுபவித்த துன்பங் களே இல்லாமல், தான் முன்னே பெற்ற சுகங்களைவிடப் பல மடங்கு அதிகமான சுகங்களைப் பெற வேண்டுமென்று அவனுடைய பேதை மனத்தில் ஆசை எழுகிறது.

இந்த ஆசை எல்லா மனிதர்களுக்கும் நிறைவேறி விடுகிறதா? அநேகமாக இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் வருங்காலம் நன்றாக இருக்க வேண்டு மென்றும், அதை முன்பே தெரிந்துகொண்டு சந்தோஷப்பட வேண்டுமென்றும் நினைக்கும் இயல்பு எல்லோருக்கும் இருக் கிறது. அந்த இயல்பு இரும்பதனால்தான் ஜோளியர்களுக் கும் ரே ைக சாஸ்திரிகளுக்கும் உலகத்தில் கிராக்கி உண்டாகிறது. -

ஜோஸியமும் ரேகை சாஸ்திரமும் உலக முழுவதும் இருக்கின்றன. அந்தச் சாஸ்திரங்கள் இருக்கின்றனவோ இல்லையோ ஜோஸியரென்றும் ரேகை சாஸ்திரங்கள் என்றும் பெயர் வைத்துக்கொண்டு. எவ்வளவோ பேர்கள் ஜீவனம் நடத்தி வருகிறார்கள். வருங்காலத்தில்ே மனித லுக்கு இருக்கிற மோகத்துக்கு அவர்களே சாட்சி. இந்த