பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறி சொல்லுதல் 91

கண்ணுக்குப் புலப்படாத கற்பக விருகத்தையும் பாடுவார் கள். இதோ நம் கண் முன்னாலே இருக்கிறதே, இந்தத் தென்னந் தோப்பையும் பாடுவார்கள். இந்திராதி தேவர் களைப் பற்றியும் பாடுவார்கள்; கூடை முறம் கட்டும் குறத்தியையும் பாடுவார்கள்.

ஆம். வாஸ்தவத்தைச் சொல்கிறேன். குறவஞ்சி என்று ஒருவகைப் பிரபந்தம் இருக்கிறது. பல புலவர்கள் பல குறவஞ்சிகளைம் பாடி யிருக்கிறார்கள். அவைகளெல்லாம் குறத்தியைப் பற்றிய பாட்டுக்கள் அடங்கிய நாடகங்களே! அவர்களெல்லாம் அந்தப் பிரபந்தங்களைப் பாடுவதற்கு நாடோடி இலக்கியத்தைச் சேர்ந்த குறத்தி பாடல்களே ஆதாரம். குறவஞ்சிகளில் கவிஞர்கள் நினைத்துக் கோத்த அலங்காரங்கள் இருக்கும். வேதாந்தம் இருக்கும். நீதி இருக்கும். ஆனால் நாடோடிப் பாடல்களிலோ குறி சொல் லும் இயற்கைக் குறத்திகளையே பார்க்கலாம். சரி, இனி அந்தக் குறத்தியையே அணுகிப் பார்க்கலாம். . இதோ செக்கச் செவலையாய்ச் சிறு பெண் குறத்தி' ஒருத்தி வருகிறாள். -

அக்குமணி சொக்குமணி அழகான பால்மணி பச்சைமணி பவளமணி பாங்காய் அலங்கரித்துக் குறத்தி யொருத்தியிங்கே கூடையிடுக்கிவந்தாள். அந்த ரேகை சாஸ்திரிக்கு ஒரு கூடையும் கையில் ஒரு பிரம்புமே அடையாளப் பொருள்கள்.

குறத்தியானாலும் அவள் அதிருப சுந்தரியாக இருக் கிறாள். அவள் நடக்கின்ற ஒயிலை நாடோடிப் பாவலன் வருணிக்கிறான்: . . . . . வாடைக் கிளிபோலே வாறாளே அக்குறத்தி

வஞ்சி யிடைது.வள மாது ஸ்தனங்குலுங்க . மின்னற் கொடிபோல மெல்லி வருகிறாளே