பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$32 கி. வா. ஜ. பேசுகிறார்

அழகு குலுங்குறது ஆனந்தங் கொஞ்சுறது வடிவு குலுங்குறது மாணிக்கங் கொஞ்சுறது.

அந்த அழகு குலுங்கும் வடிவழகி வீதியிலே போனால் எத்தனை ஆயிரங் கண்கள் அவளைப் பார்த்துப் பிரமித்துப் போகும். ஆடவர்கள் குறத்தியைப் பார்த்துச் சொக்கி நிற்கிறார்கள். அவளை வியக்கிறார்கள். எழுதவொண்ணா வடிவழகி இவ்வீதி வந்தாள்காண் காய்க்கும் பிராயமவள் கண்ணிகட்டும் காலமவள் பூக்கும் பிராயமவள் பிஞ்சு விடுங் காலமவள் கொஞ்சும் பிராயங்கண்டீர் கொழுந்தெல்லாம் பிஞ்சுகண்டீர் பாதி வயசுகண்டீர் பக்கமெல்லாம் பிஞ்சுகண்டீர்.

அவர்கள் வருணித்துக்கொண்டிருக்கும் போதே அவள் அடுத்த வீதிக்குப் போய் விடுகிறாள். அங்கேயும் அவளுடைய வடிவழகின் விமரிசனம் நடக்கிறது. அப்பப்பா! என்ன பொல்லாத கண்!

பார்த்தார் குறத்தியரைப் பங்கயச்சீர்க் கண்ணாலே இதுபுதுமை இதுபுதுமை இதுநெடுநாள் கண்டதில்லை கண்டும் அறியோமே கதையிலுங் கேட்டறியோம் பார்த்தும் அறியோமே படத்திலுங் கண்டறியோம்

விமரிசனத்தோடு நின்று விடுகிறார்களா? இல்லை. அவளைப் பார்த்து மயல்பெருகித் தங்கள் வீட்டுக்கு அழைக் கிறார்கள். . . . . . .

வாடி மலைக்குறத்தி எங்களுக்குக் கைபார்க்க வீதிவீதி யாகவே விரும்பித் திரிவானேன் . கானலிலும் வெய்யிலிலும் சுடுகித் திரிவானேன் உள்ளங்கால் கொப்புளிக்க உச்சி வெடித்துவிட வேண்டி விடாய்த்து வெளியில் திரிவானேன்?

ஐயோ, பாவம் அவளிடத்தில் எத்தனை இரக்கம்