பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறி சொல்லுதல் 93

வாடி மலைக்குறத்தி மாளிகையில் இட்டுப்போறோம் மெத்தையின்மேல் வைக்கிறோம் வேணபணி பூட்டுகிறோம் சிங்கா தனத்தில்வைத்துச் சேவித்துப் பார்க்கிறோம் பொன்னடிக்கீழ்த் தெண்டனிட்டுப் புஷ்பம் அலங்கரிப்போம்

அடடா! என்ன பக்தி விசுவாசம்! என்ன உபசாரம்! அப்புறம்? மெத்தையுண்டு மேடையுண்டு வீற்றிருக்கச் சோலையுண்டு சுத்தி யுலாவுதற்குச் சிங்காரச் சோலையுண்டு கட்டிலுண்டு மெத்தையுண்டு கால்பிடிக்கத் தாதியுண்டு படுக்க இடமுமுண்டு பள்ளிகொள்ளத் தாவுமுண்டு தின்னதல்ல பாக்குமுண்டு செம்பொன் அநேகமுண்டு அணியப் பரிமளமும் அள்ளித்தரப் புனுகுமுண்டு என்று சொல்லித் தொடர்கிறார்கள். இளைஞர்கள் மாத்தி ரமா? கிழங்கள் பழங்களெல்லாம் கிட்டிவந்து பல் திறந்தார் களாம். -

இந்தப் பேர்வழிகளைப் பயமுறுத்தியும் நியாயம் சோல்வியும் எல்லோரையும் ஏமாற்றிவிட்டுப் போய்விடு கிறாள் குறத்தி. அவள் ஆடவர் கைகளைத் தொட்டுப் பார்த்துக் குறி உரைப்பவள் அல்ல. கட்டுக்கு அடங்காத அவள் நடையுடையால் அவள் குணமும் கட்டுக்கு அடங்காத தென்று நினைக்கக் கூடாது. நாகரிகம் மிக்க ஜனங்களை விட அவள் இனத்தாரே ஒழுக்கத்தில் சிறந்தவர்கள்.

குறத்தி ஒர் அரண்மனை வாசலுக்கு வருகிறாள். அந்த அரண்மனையில் ஒரு பெண்ணரசி தன் நாயகன் பிரிந்திருப்ப தனால் மிகவும் துக்கமடைந்து இருக்கிறாள். மின்னொளி யாள் என்பது அவள் பெயர். அவள் நாயகன் அர்ச்சுனன்.

அவள் கோலமே அவளுடைய துயரத்தைப் புலப்படுத்து கிறது.