பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கி. வா. ஜ. பேசுகிறார்

ைமஎழுதாக் கண்ணும் மலர்புனையாக் கேசமும் பாக்குத்தின் னாவாயும் பத்தினியாள் தன்முகமும் வெற்றிலை தின்ன விரும்பாள் விடாய்முகமும் மஞ்சள் அணு காத வடிவுடையாள் மார்பழகும் பொன்னான மேனியது புழுதிபட

அவள் இருக்கிறாள். அவளுடைய தோழிமார்கள் குறத் தியை வீதியிலே கண்டு தம்முடைய எஜமானிக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்குமென்று எண்ணி அவளைக் கொண்டுபோய் விடுகிறார்கள்.

குறத்தி உலகியல் தெரிந்த மகா சாமர்த்தியசாலி. புகும் போதே நல்ல சகுனமெல்லாம் ஆவதாகச் சொல்லிக் கொண்டு மின்னொளியாளை அணுகுகிறாள்.

தலைப்புறத்தில் கெவுளி நின்று சொல்லுதடி பெண்ணே மலைக்குரியான் வாள் விசையன் வருவான டிபெண்ணே.

நல்ல சகுனத்தோடு குறத்தி வரும்போது மின்னொளி யாளுக்கு நம்பிக்கை உதயமாகிறது. வாடிய முகம் சிறிதே. ஒளி விடுகிறது. இதை மின்வெட்டும் நேரத்திலே அந்தக் கைகாரக் குறத்தி கண்டுகொள்கிறாள். முதலிலேயே தன் னுடைய சொந்த விஷயத்தைப் பேசிக்கொன்கிறாள் : எனக்குநல்ல கறிசோறு இடுவாயோடி பெண்ணே ஆக்கின சோறுகறி பாக்குமெனக் கருள்வாய் அருகெட்டு முழச்சேலை பழந்துணியுந் தருவாய் அருளாகுஞ் செல்வமுண்டு ஆளன் வரப் போறான் அறுமுகவன் திருவருளால் ஆளன்வரு வாண்டி. கையை நீட்டிக் குறி பார்க்காமலே சுபபலன் சொல்லும் அந்தக் குறத்தியை ஏற இறங்கப் பார்க்கிறாள் மின்னொளி யாள். 'நீ எந்த நாடு? எந்த ஊர்?' என்று கேட்கிறாள். குறத்தி புராணத்தைப்போல ஆரம்பித்து விடுகிறாள். - - - -