பக்கம்:கீதைப்பாட்டு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான யோகம் 103 அதனை வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும், தொண்டு புரிவதாலும் அறிந்துகொள். உண்மை காணுதி ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள். யத் ஜ்ஞாத்வா ந புனர்மோஹ-மேவம் யாஸ்யலி பாண்டவ யேன பூதான்-யசேவேஷன த்ரயகூடியஸ் - யாத்மன்யதோ மயி 35. ஏதறிந்து திரும்ப விவ்வன மோக மெய்தலை பாண்டவ யாதி னாலுள பூதம் யாவையு நின்கனோர்வை பினென்கனே. 197 அந்த ஞானம் பெறுவதனால், பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கமெய்த மாட்டாய். இதனால் நீ எல்லா உயிர்களையும். மிச்சமின்றி நின்னுள்ளே காண்பாய். அப்பால் அவற்றை என்னுள்ளே காண்பாய். அபி சேதலி பாபேப்ப்ய ஸர்வேப்ப்ய: பாபக்ருத்தம: லர்வம் ஜ்ஞான-ப்லவேனைவ வ்ருஜினம் லந்தரிஷ்யலி 36. பாவ காரியர் யாரினும் முயர் பாவ காரிய னேனுநீ பாவம் யாவையு ஞான மாகிய நாவ மேகொடு தாவுவாய். 798 பாவிகளெல்லாரைக் காட்டிலும் நீ அதிகப் பாவியாக இருந்தாலும், அப் பாவத்தையெல்லாம் ஞானத் தோணியால் கடந்து செல்வாய். யதைதாம்லி லமித்தோக்னிர்-பஸ்மலாத் குருதேsர்ஜூன ஜ்ஞானாக்னி: லர்வகர்மாணி பஸ்மலாத் குருதே ததா 37. எங்ங்னம்பல விறகை நீறுசெய் கிற்ப தர்ச்சுன வளர்தழல் அங்ங்னங்கரு மம்மெ லாமறி வாரழல் செபு நீறுதான். 799 நன்கு கொளுத்துண்ட தீ விறகுகளைச் சாம்பராக்கி விடுதல் போலவே, அர்ஜூனா, ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பராக்கிவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/104&oldid=799646" இலிருந்து மீள்விக்கப்பட்டது