பக்கம்:கீதைப்பாட்டு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தியான யோகம் 13. புரீ பகவான் சொல்லுகிறான் : பெருந்தோளாய், மனம் கட்டுதற்களிதுதான். சலனமுடையதுதான் ஐயமில்லை. ஆனால், குந்தியின் மகனே. அதைப் பழக்கத்தாலும், விருப்பின்மையாலும் கட்டி விடலாம். அலம்யதாத்மனா யோகோ துஷப்ராப இதி மே மதி: வச்யாத்மனா து யததா சக்யோSவாப்து-முபாயத: 36. அகமடக்கமில னாலியோகடைத லரிய தென்பதென தெண்னமால் அகம்வயப்படுத லுடைய னாய்நெறி யின் முயல்வனோ வடைய வலியனே. 259 தன்னைக் கட்டாதவன் யோக மெய்துதல் அரிதென்று நான் கருதுகிறேன். தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும் அதனை எய்த வல்லான். அர்ஜூன உவாச I அயதி: ச்ரத்தயோபேதோ யோகாச்-சலித-மானல: அப்ராப்ய யோக-லம்லித்திம் காங் கதிங் க்ருஷ்ண கச்சதி 37. சிரத்தையொடு கூடியு முயற்சிகுறை பட்டோன் சித்தியினை யோகினிடை யெய்துகிலன் யோகிற் றிரத்துநிலை யாதுசல னப்படுவ தாய சிந்தையுளன் வந்தடைவ தெந்தநிலை கண்ண. 27 O அர்ஜூனன் சொல்லுகிறான் : நம்பிக்கையுடையோ னெனினும், தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவியவன் யோகத்தில் தோற்றுப்போய், அப்பால் என்ன கதியடைகிறான். கண்ணா? கச்சின்னோபய-விப்ப்ரஷ்ட்டச் சின்னாப்ப்ரமிவ நச்யதி அப்ரதிஷ்ட்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண: பதி 38. ஒருநிலைகொ வாதான் பிரம நெறி மேலும் ஒழியுமதி மூடன் னுபயவித முங்கெட் டொருவினன் சிதைந்த புயலைதிக ராக ஒழிவுறுகி லானோ உயர்புயமு ளோயே. 2/J ஒருவேளை அவன் இரண்டுங் கெட்டவனாய், உடைந்த மேகம்போல் அழிகிறானோ? பெருந்தோளாய், உறுதியற்றவனாய், பிரம்ம நெறியிலே குழப்பமெய்திய மூடன் யாதாகிறான்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/128&oldid=799672" இலிருந்து மீள்விக்கப்பட்டது