பக்கம்:கீதைப்பாட்டு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கீதைப் பாட்டு ஏதன்மே லம்சயம் க்ருஷ்ண சேத்து-மர்ஹஸ்-யசேஷத: த்வதன்ய: ஸ்ம்ச்யஸ்யாஸ்ய ச்சேத்தா ந ஹ்யுபபத்யதே 39. இவ்வண்ண மாமென்ற னையத்தை யெஞ்சா தீர்தல்செ யற்குக்கண் ணாவல்லை யாவை இவ்வண்ண மாகின்ற ஐயத்தி னைத்தான் ஈர்வா னினின்வே றுளானில்லை யன்றோ. 272 கண்ணா, எனக்குள்ள இந்த ஐயத்தை நீ அறுத்து விடுக. நின்னை யன்றி இந்த ஐயத்தை யறுப்போர் வேறெவருமிலர் ப பகவானுவாச : பார்த்த நைவேஹ நாமுத்ர விநாசஸ்-தஸ்ய வித்யதே ந ஹறிகல்யாணக்ருத் கச்சித் துர்க்கதிம் தாத கச்சதி 40. அவற்கிவண் னொருகேடு மேயிலை யத்த மேலுலகத்து மஃதிலை சுவத்தினைச் செயு மெவனுந் துர்க்கதி தோய் கிலன்னரோ பிருதை தோன்றலே. 2"7。 புரு பகவான் சொல்லுகிறான்: பார்த்தா, அவனுக்கு இவ்வுலகிலும், மேலுலகத்திலும் அழிவில்லை. மகனே, நன்மை செய்வோன் எவனும் கெட்ட கதியடையமாட்டான் ப்ராப்ய புண்யக்ருதாம் லோகா-னுவித்வா சாச்வதி: ஸ்மா: சுசீனாம் பூரீமதாம் கேஹே யோகப்ப்ரஷ்டோSபிஜா யதே 41. யோசின் னழுவுற் றவன்புண் ணியஞ்செய் குநருற்ற வுலோக மடைந்தன வின் றாகும்வ ருடங்க ளமர்ந்து தயம் ஆவன் திருவந்தவர் தூயர்மனை. 2.74 யோகத்தில் தவறியவன். புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி, அங்குக் கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து. தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில் பிறக்கிறான். அதவா யோகினாமேவ குலே பவதி தீமதாம் ஏதத்தி துர்லபதரம் லோகே ஜன்ம யதீத்ருசம் 42. ஈதேய லாமற் றெருண்மிக் கியோகத் திருப்பார் சிறக்குங் குடிக்கே யுதிப்பான் யாதிப்பு டித்தோர் பிறப்பீது லோகத் தெடுக்கக் கிடைக்காத மேலாய தன்றோ. 275 அல்லது. புத்திமான்களாகிய யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான். இவ்வுலகில் இது போன்ற பிறவியெய்துதல் மிகவும் அரிது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/129&oldid=799673" இலிருந்து மீள்விக்கப்பட்டது