பக்கம்:கீதைப்பாட்டு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜ வித்தியா ராஜ ரகசிய யோகம் 157 நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே தலைவன் என்னை மனிதர் உள்ளபடி அறியார் ஆதலால் நழுவி வீழ்வார். யாந்தி தேவல்ரதா தேவான் பித்ருன் யாந்தி பித்ருவ்ரதா: பூதானி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜினோSபி மாம் 25. தேவரை யெய்துவர் தேவ விரதியர் சேர்வர் பிதுர்விர தத்தர் பிதுர்க்களை மேவுவர் பூதரைப் பூதரை வேட்பவர் மேவுவ ரென்றனை வேட்பவ ரும்மெனை. 353 தேவ விரதிகள் தேவரை எய்துவார். பிதிர்க்களை நோற்பார் பிதிர்க்களை யடைவார். பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார் என்னை வேட்போர் என்னை எய்துவார். பத்ரம் புஷ்பம் பலந் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி ததஹம் பக்த்யுபஹ்ருத-மச்னாமி ப்ரயதாத்மன: 26. ஆரெற் கிலையைப் பூவைக் கனியை அறலைத் தருவா னொருபத் தியினச் சீர்மைப் பரிசுத் தமனத் தினன்பத் தியினர்ப் பணமிட் டதுதுய்க் குவல்யான். 364 இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும். அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான். யத்கரோஷி யதச்னாலி யஜ்ஜூஹோஷி ததாலி யத் யத்தபஸ்யலி கெளந்தேய தத் குருவி:வ மதர்ப்பணம் 27. எதுசெய் குதியோ வெதுவுண் குதியோ எதுவேட் குதியோ எதுநல் குதியோ எதுதான் றவமே வுதியோ வதையென் னிடனர்ப் பணமே புரிகுந் தியின்சேய். 35.5 நீ எது செய்யினும், எதனை நீ உண்பினும், எதை நீ ஹோமம் பண்ணினும், எதனைக் கொடுத்தாலும், எத்தவத்தைச் செய்தாலும், குந்தி, மகனே. கடவுளுக்கு அர்ப்பணமென்று செய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/158&oldid=799705" இலிருந்து மீள்விக்கப்பட்டது