பக்கம்:கீதைப்பாட்டு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதைப் பாட்டு (பத்தாம் அத்தியாயம்) விபூதி யோகம் (- இயற்பொருள் on-o) பத்தெனியல் பத்திவிளை வித்துவளர் வித்தற்கு ஒத்துதவு கிற்குமிறை யோங்கு குணமென்றும் அத்தனை பிராணியு மவற்குவய மென்றும் புத்திதெளி யும்வனம் புகன்றது. வெவ்வேறே. பக்தியுடன் தியானம் செய்வதற்காகக் கடவுளின் பெருமை இதில் விரித்துக் கூறப்படுகின்றது. கடவுளே எல்லாவற்றிற்கும் பிறப்பிடம். அவரிடமிருந்தே எல்லாம் வெளிவரும். அவரே அழியா வீடு. அவரே அமரர்க்கும் முன்னோர். அவரே பிறப்பிலர். அவரே இறைவன். அவரே உயிர்களனைத்தின் உள்ளத்தில் நிறைந்திருக்கும் ஆத்மா. அவரே வேதங்களுள் சிறந்த சாம வேதம். தேவரில் இந்திரன். ருத்தி ரர்களில் சங்கரன். மலைகளில் மேருமலை. சப்தங்களுள் பிரணவம் தாவரங்களுள் இமயமலை. மரங்களுள் அரச மரம். மனிதர்களுள் அரசன். பசுக்களுள் காமதேனு. அசுரருள் பிரகலாதன். பறவைகளுள் கருடன். வீரர்களுள் ராமன். எழுத்துக்களுள் "அ" என்னும் முதலெழுத்து. மாதங்களுள் மார்கழி. மேற்கூறியவை யெல்லாம் உதாரணமாக ஒவ்வொன்றிலும் சிறந்தவையாக எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. அவரின் பெருமையைத் தனித்தனியே முற்றிலும் கூறுவது இயலாத காரியம். எந்த அசைபொருளும் அசையாப் பொருளும் அவரை விட்டுத் தனித்து நிற்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/162&oldid=799710" இலிருந்து மீள்விக்கப்பட்டது