பக்கம்:கீதைப்பாட்டு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ - 164 கீதைப் பாட்டு அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸ்ர்வம் ப்ரவர்த்ததே இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவலமன்விதா: 8. முழுவதற்கு முத்பத்தி யேதுநான் முழுவதும்மெனா னடைபெறும் மென முழுவதுந் தெரிந்தவ ருணர்ந்தவர் முழுதொ டும்மெனைத் தொழுதல் செய்வரால். 380 நான் அனைத்திற்கும் தொடக்கம். என்னிடமிருந்தே எல்லாம் இயலும். இங்ங்ன முணர்ந்த புலவர் என்னை அன்புடன் தொழுவார். மச்சித்தா மத்கதப்பாணா போதயந்த பரஸ்பரம் கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச 9. உளமென்கண் வைத்தவர்க ளுயிரென் னிடத்தவர்கள் ஒருவர்க் கொருத்தர் தெளிவித் துளவென்னை நித்தியமு முரைசெய்து சித்தமகி ழுவருட் டிருத்தி யுறுவார். 387 அகத்தினை என்பால் வைத்து. உயிரை என்னுள்ளே புகுத்தி, ஒருவரை யொருவர் உணர்விப்பாராய், எக்காலுந் தம்முள் என்னைக் குறித்தியம்பு வார். அன்னோர் மகிழ்ச்சியும் இன்பமும் அடைவார். தேஷாம் ஸததயு-க்தானாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம் ததாமி புத்தியோகம் தம் யேன மாமுபயாத்தி தே 10. என்று மென்னுடன் வாழ வெண்ணினா ரென்னை யன்புசெய் துள்ள ரன்னருக் கென்ன வேதுவா லென்னை யெய்துவா ரீவலன் பொடப் புத்தியோகமே. 38.2 எப்போதும் யோகத் திருப்பாராகில் அன்புடன் என்னை வழிபடும் அன்னோர்க்கு யான் புத்தியோகம் அளிப்பேன். இதனால் என்னை யவர் எய்துவார். தேஷா-மேவானுகம்பார்த்த-மஹ-மஜ்ஞானஜந் தம: நாசயாம்-t'ாத்மபாவஸ்த்தோ ஜ்ஞானதீபேன கஸ்வதா அவருக் கருளைச் செயவே யவர்தம் அகனிற் கருதற் குறநின் றொருயான் அவருக் கொளிசெய் யறிவுச் சுடரின் அறிவற் றிதினெய் திருளைத் தெறுவேன். 383

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/165&oldid=799713" இலிருந்து மீள்விக்கப்பட்டது