பக்கம்:கீதைப்பாட்டு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 கீதைப் பாட்டு விருஷ்ணி குலத்தாரில் நான் வாசுதேவன் பாண்டவர்களில் தனஞ்ஜயன். முனிகளில் வியாசன் கவிகளில் சுக்கிர கவி. தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம் மெளனஞ் சைவாஸ்மி குஹ்யானாம் ஜ்ஞானம் ஜ்ஞ்ானவதா-மஹம் 38. ஒறுப்ப வர்க்குளே தண்ட மாகுவேன் உயர்செயம் விரும்பினரு ணிதி யான் மறைப்பின் மோனமு மேயெனா வுளேன் மதியு ளாருளே ஞானம் யானரோ, - 410 ஆள்வோரிடத்தே கோல் நான் வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி நான் ரகசியங்களில் நான் மெளனம் ஞான முடையோரிடத்தே நான் ஞானம். யச்சாபி ஸர்வபூதாளாம் பீஜம் ததஹ-மர்ஜூன ந ததஸ்தி விநா யத்ஸ்யான்-மயா பூதம் சராசரம் 39. அருச்சுன பிராணி முழுதிற்கும் மொரு வித்தென் றாயதெது வோவதுவும் யானென னிலைத்தே இருப்பன வியங்குவ பிராணி பலவற்றுள் என்னொழிய வுள்ளவெது வேனுமது வில்லை. 417 எல்லா உயிர்களிலும் விதை எதுவோ அது நான் அர்ஜுனா, சராசரங்களில் என்னை யின்றியுள்ள பூதமொன்றில்லை. நாந்தோsஸ்தி மம திவ்யானாம் விபூதீனாம் பரந்தப ஏஷதுத்தேசதப்ரோக்தோ விபூதேர்-விஸ்வதரோ மயா 40. என்றிப்பிய மாகும் விபூதி களுக் கீறென்பது மில்லை பரந்தபனே என்னிப்பல் விபூதி பரந்ததெனா லிவனோ வொருவா றுரைசெய் ததுவாம். 412 பார்த்தா என் திவ்ய மகிமைகளுக்கு முடிவில்லை. விஸ்தாரமான என் மகிமைகளில் கொஞ்சம் மாத்திரம் உனக்குரைத்தேன். யத்யத் விபூதிமத் லத்வம் பூரீமத்துர்ஜித-மேவ வா தத்ததேவாவகச்ச த்வம் மம தேஜோSம்சலேம்பவம் 41. எவ்வெவ்வுள சிவ்ன் விபூதியதோ ஏறுந் திருவத்துட னின்புளதோ அவ்வவ் வுயிரென் னொளியின் றுளியுற் பவமே யெனநீ தெளிவெய் துவையால். 413

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/173&oldid=799722" இலிருந்து மீள்விக்கப்பட்டது