பக்கம்:கீதைப்பாட்டு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விகவருப தரிசன யோகம் 179 அப்போது தனஞ்ஜயன் பெரு வியப்பெய்தி, மயிர் சிலிர்த்து. அக் கடவுளை முடியால் வணங்கிக் கைகளைக் கூட்பிக்கொண்டு சொல்லுகிறான். அர்ஜுன உவாச : பச்யாமி தேவான்ஸ்-தவ தேவ தே ஹே லர்வான்ஸ்-ததா பூதவிசேஷ லங்க்கான் ப்ரஹ்மான-மீசங் கமலாஸ்னஸ்த்தம் ருஷம்ச்ச ஸர்வா-னுரகாம்ச்ச திவ்யான் 15. அமரர் யாரு மவிதமெவர் முநிவரும் அகில சீவர்பல் கணமொடு பிரமனும் கமல வாசன னிடனுள தலைவனுங் கடவுளோர் பலுன்மெயில் வினினுரகரும். 429 அர்ஜூனன் சொல்லுகிறான்: தேவனே. நின் உடலில் எல்லாத் தேவர்களையும் காண்கிறேன். பூத வகைகளின் தொகுதிகளைக் காண்கிறேன். தாமரை மலரில் வீற்றிருக்கும் ஈசனாகிய பிரமனையும். எல்லா ரிஷிகளையும் தேவ சர்ப்பங்களையும் இங்கு காண்கிறேன். அனேக பாஹ9தரவக்த்ர-நேத்ரம் பச்யாமி த்வாம் ஸர்வதோsனந்த-ரூபம் நாந்தம் ந மத்த்யம் ந புனஸ்-தவாதிம் பச்யாமி விச்வேச்வர விச்வரூப 16. அனைத்து நியமிப்பவ வனைத்துமெய் யமைத்தோய் அளப்பில முகத்தின் விழியிற்கையின் வயிற்றின் இணைத்தென விலாவடி வுனைத்தெரிவ லெங்கும் ஈறுநடு மற்றுமுதல் தேறுகில னிற்கே 43) பல தோளும், பல வயிறும் பல வாயும், பல விழிகளுமுடைய எல்லையற்ற வடிவிலே நின்னை எங்கனும் காண்கிறேன். எல்லாவற்றுக்கும் ஈசனே, எல்லாந் தன் வடிவாகக் கொண்டவனே. உனக்கு முடிவேனும், இடையேனும், தொடக்கமேனும் காண்கிலேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/180&oldid=799731" இலிருந்து மீள்விக்கப்பட்டது