பக்கம்:கீதைப்பாட்டு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 கீதைப் பாட்டு திவ்ய-மால்யாம்பர-தரந் திவ்ய-கந்தானுலேபனம் ஸர்வாச்சர்மயத் தேவம் அனந்தம் விச்வதோமுகம் 1. திப்பிய மாகிய தார்துகில் பூண்டு திப்பிய சந்தனம் பூசி யெலாமும் அற்புத மேமய மாயொளி வீசி யந்த மிலாதெங் கணும்முக மாகி +25 திவ்ய மாலைகளும் ஆடைகளும் புனைந்தது. திவ்ய கந்தங்கள் பூசியது: எல்லா வியப்புக்களும் சான்றது. எல்லையற்றது. எங்கும் முகங்களுடைய தேவரூபம். திவி ல9ர்ய-லஹஸ்ரஸ்ய பவேத்யுகப-துத்திதா யதி பா: ஸ்த்ருசி லா-ஸ்யாத் பாலஸ்-தஸ்ய மஹாத்மன: 12. ஆயிரவர் சூரியர்கள் சோதியொரு போதே யவ்வினி னுதித்துவர லாகுமெனி னங்கண் மேயவொளி பேருயிரெனப்படு மவன்றன் வீறொளி பொரும்மெனின் னதும்பொருவு மேயோ 426 வானத்தின் ஒருங்கே ஆயிரம் இரவிகள் எழுவாராயின், அங்கு தோன்றும் ஒளியை அந்த மகாத்மாவின் ஒளிக்கு நிகராகக் கூறலாம். தத்ரைகஸ்த்தம் ஜகத் க்ருத்ஸ்னம் ப்ரவிபக்த-மனேகதா அபச்யத்-தேவதேவஸ்ய சர்ரே பாண்டவஸ்-ததா 13. பாண்டு விற்கொரு சேயல் வேளையிற் பலசுரர்க்குமே தெய்வ மாமவன் பூண்ட மெய்யினோர் புடையி னோக்கினான் புவனம் யாவும் பற்பல பிரிப்பொடே 427 அங்கு பல பகுதிப்பட்டதாய், வையக முழுதும், அந்தத் தேவ தேவனுடைய சரீரத்தில் ஒருங்குற்று நிற்பதை அப்போது பாண்டவன் கண்டான். தத ல விஸ்மயாவிஷ்டே ஹ்ருஷ்டரோமா தனஞ்ஜய: ப்ரணம்ய சிரஸா தேவம் க்ருதாஞ்ஜலி-ரபாஷத 14. பின்னத் தனஞ்சயன் வியப்பின் முழுகுற்றுப் பெரிதுந்தன் மேனிமயிர் குச்செறிய நின்று சென்னித் தலங்கொடு தெய்வத்தினை வணங்கிச் செங்கைக்க னஞ்சலி செயாவுரை செய்தானால், 42.8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/179&oldid=799729" இலிருந்து மீள்விக்கப்பட்டது