பக்கம்:கீதைப்பாட்டு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 கீதைப் பாட்டு ஆதலால் நீ எழுந்து நில் புகழெய்து பகைவரை வென்று செழிய ராஜ்யத்தை ஆள். நான் இவர்களை ஏற்கெனவே கொன்றாய்விட்டது. 'இடக்கை வீரா. நீ வெளிக் காரணமாக மட்டும் நின்று தொழில் செய். (இடக்கை வீரன் - இது பார்த்தன் பெயர்) த்ரோணஞ் ச பீஷ்மஞ் ச ஜயத்ரதஞ் ச கர்னந் ததான்யா-னபி யோத வீரான் மயா ஹதான்ஸ்-த்வம் ஜஹறி மா வ்யதிஷ்ட்டா யுத்த்யஸ்வ ஜேதாலி ரனே ஸ்பத்னான் 34. என்றனா லதமுண்ட கன்னனொடுந் துரோன னொடுச்சயத் திரதன் வீடுமனென வுளாரையு மின்னவா றிகல்விரராய் நின்ற வந்தியர் தம்மையுங்கொல்வை நீகளத்தயர் வெய்தலை நேரெதிர்ந்த வொனாரை வெல்குவை போர்தொடங்குவை யாவையால். 448 துரோணனையும். பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் மற்ற யுத்த வீரர்களையும் நான் கொன்றாய் விட்டது. (வெளிப்படையாக நீ கொல். அஞ்சாதே போர் செய்; செருக்களத்தில் நின் பகைவரை வெல்வாய். பெஞ்ஜய உவாச : ஏதச்-ச்ருத்வா வசனம் கேசவஸ்ய க்ருதாஞ்ஜலிர்-வேபமான: கிரீடீ நமஸ்க்ருத்வா பூய ஏவாஹ க்ருஷ்ணம் லகத்கதம் பீதபீத: ப்ரணம்ய 35. உறுகேசவன் வாய்மொழி யின்னதுகேட் டொருகண்ணனை முன்றொழு தஞ்சிவெரீஇ மறுகாலடி வீழ்ந்து கைகூம்பவொலி வாய்தேம்ப நடுங்கு கிரீடி சொல்வான். 4-19 சஞ்ஜயன் சொல்லுகிறான் : கேசவன் சொல்லிய இவ்வார்த்தையைக் கேட்டுப் பார்த்தன் மெய்ந் நடுக்கத்துடன் அஞ்சலி புரிந்தான். மீட்டும் கண்ணனை நமஸ்காரம் பண்ணி, அச்சத்துடன் வாய் குழறி வணங்கிச் சொல்லுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/187&oldid=799738" இலிருந்து மீள்விக்கப்பட்டது