பக்கம்:கீதைப்பாட்டு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசுவருப தரிசன யோகம் 189 இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல், நின்னைத் தோழனென்று கருதித் துடிப்புற்று, “ஏ கண்ணா ஏ யாதவா, ஏ. தோழா” என்று தவறுதலானேனும் அன்பாலேனும் நான் சொல்லி யிருப்பதையும் யச்சாவஹாலார்த்த-மஸ்த்-க்ருதோsஸி விஹார-சய்யாலன-போஜனேஷல் ஏகோSதவாப்-யச்யுத தத்லமrம் தத்-கூடிாமயே த்வா-மஹ-மப்ரமேயம் 42. தனியின் மற்றுள பலர்முனர்ப் பரிகாசமா விளையாடலாற் சயனமீதுமொ ராசனத்தினு மசனவேளையு மச்சுத தனியிகழ்ச்சியி னெதுசெயப்பட லாயினாயது தன்னையும் யாரளக்கவு மாகலாவுனை நானிரப்பல் பொறுக்கென. 456 விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும், தனியிடத் தேனும், அன்றி மற்றவர் முன்னே யெனினும் நான் உனக்கு வேடிக்கையாகச் செய்திருக்கும் அவமதிப்புகளையும் அவற்றையெல் லாம் பொறுக்கும்படி வேண்டுகிறேன். அளவற்.ாய்! பிதாலி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யச்ச கருர்-கரீயான் ந த்வத்-லமோsஸ்த்-யப்ப்யதிக: குதோsன்யோ லோகத்ரயேSப்-யப்ப்ரதிம-ப்ரபாவ 43. சமமிலாத பிரதாப மேயவ சரித்துநிற்கு முலகிற்குநீ தாதை யோடுகுரு வாகுவாய் பெரிய தாயபூசை தகுவாயரோ அமையு லோகமொரு மூன்றி லேனுமுனை யலதுவேறொருவ ருவமையா மவரிலாத பொழுதேது சொல்ல நியாதிகராகியவ ரென்பதே. 457 சராசரமாகிய இவ்வுலகத்துக்கு நீ தந்தை யாவாய். இவ்வுலகத்தால் தொழத் தக்கனை மிகவும் சிறந்த குரு நீ உனக்கு நிகர் யாருமில்லை. எனில் உனக்குமேல் வேறு யாவர்? மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/190&oldid=799742" இலிருந்து மீள்விக்கப்பட்டது