பக்கம்:கீதைப்பாட்டு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதைப் பாட்டு ( பதினான்காம் அத்தியாயம்) குணத்ரய விபாக யோகம் ( இயற்பொருள் ఎrఉ6) ஈரே ழெனுமியன் முக்குன மிவண் கட்டலும் வினையிற் கார்நா யகமவை யென்பது மவைதீதற விடலும் சேர்மூன்று கதிக்கும் பரதெய்வந் நிபமெனலும் தேராதவருந் தேர்வுறவுரை செய்வது மாதோ. தேக சம்பந்தமே ஆத்மாவின் சுகதுக்கங்களுக்கும் கோபதாபம் முதலிய குணங்களுக்கும் காரணமென்று முற்கூறிய விஷயம் இதில் விவரிக்கப்படுகிறது. உலகத்தைப் படைக்க எண்ணங் கொண்ட கடவுள் முதலில் பிரகிருதியையும் ஜீவனையும் சேர்க்கிறார். பிறகு பிரகிருதி ஆத்மாவின் மும்மைக் காமத்துக் கேற்ப தேவ மனுஷ்ய பசு பகதி ரூபங்களைப் பெற்று சத்வ ரஜஸ் தமோ குணங்களால் ஆத்மாவைப் பிணிக்கிறது. அவற்றுள் சத்வம் மனிதனுக்கு ஞான வொளியையும் நன்மார்க்கத்தில் விருப்பத்தையும் அளிக்கிறது. ரஜஸ் அவா. பற்றுதல் முதலிய குணங்களை யளித்து கர்மங்களில் துாண்டுகிறது தமஸ் மயக்கம், சோம்பல், உறக்கம் முதலியவற்றை யளிக்கிறது. இம் மூன்று குணங்களுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமயங்களில் தலையெடுத்து நிற்கும். அப்போது மனிதனுக்கு அதற்கேற்ற குணங்கள் உதிக்கின்றன. முற்கூறிய கடவுளைத் தியானிப்போன் இம்மூன்று குணங்களையும் வென்று சித்தி பெறுவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/214&oldid=799768" இலிருந்து மீள்விக்கப்பட்டது