பக்கம்:கீதைப்பாட்டு.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 கீதைப் பாட்டு உத்தம புருஷஸ்த்-வன்ய: பரமாத்மேத்-புதாஹ்ருத: யோ லோகத்ரய-மாவிச்ய பிபர்த்-யவ்யய ஈச்வர: 17. ஒருபர மாத்தும னென்றுரை தருதற்குரிய உத்தம புருடனெனின் மற்றிவரிற் பிறனால் ஒருவித மாறுதலு முறுகில னிச்சுரன்மூ வுலகையு நுழைபவ னேந்துவ னெவனம்மவரோ. 559 இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன். அவன் மூன்று உலகுகளினும் புகுந்து அவற்றைத் தரிக்கிறான் கேடற்ற ஈசுவரன். யஸ்மாத் கூடிர-மதீதோsஹ-மகூடிராதபி சோத்தம: அதோsஸ்மி லோகே வேதே ந ப்ரதித: புருஷோத்தம: 18. எவ்வேது வினாலழி வுள்ளதனுக் கெட்டே னழியாதினு முத்தமன்யான் அவ்வேது.வி னாலுகத் துமறை யதிலும்புருடோத் தமனா மிளிர்வேன். 570 நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும் வேதங்களாலும் புருஷோத் தமனென்று கூறப்படுகிறேன். யோ மாமேவ-மலம்மூடோ ஜானாதி புருஷோத்தமம் ஸ் லர்வவித்-ப்பஜதி மாம் ஸர்வபாவேன பாரத 19. எவனிப் படியே புருடோத் தமனாம் எனைமூட மிலாதவனா வறிவன் அவன்முற்று முனர்ந்தவன் பாரதபா வனையா வையினுந் தொழுவோ னெனையே. 57.1 மடமை தீர்ந்தவனாய், எவன் யானே புருஷோத்தமனென்பதை அறிவானோ அவனே எல்லா மறிந்தோன். அவன் என்னை எல்லாத் தன்மையாலும் வழிபடுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/229&oldid=799784" இலிருந்து மீள்விக்கப்பட்டது