பக்கம்:கீதைப்பாட்டு.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புருஷோத்தம யோகம் 227 அஹம் வைச்வானரோ பூத்வா ப்ராணினாம் தேஹ-மாச்ரித: ப்ராடாபான-லமாயுக்த: பசாம்-யன்னஞ் சதுர்விதம் 14. வயிற்றின் வளர்சாடர வெந்தழலாய் மன்னும் முயிர்மெய் தொறுமே வியிருந் துயிர்க்கின்ற பிராண னபானனுடன் ஒருநால் வகையா முணவும் மடுவேள். 566 நானே வைசுவாநரனாய், உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன். பிராணன் அபானன் என்ற வாயுக்களுடன் கூடி நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீர்ண மாக்குகிறேன். (வைசுவா நரன் - எல்லா நரரிடத்துமுள்ள கடவுள்) லர்வஸ்ய சாஹம் ஹ்ருதி லந்நிவிஷ்டோ மத்த ஸ்ம்ருதிர்-ஜ்ஞான-மபோஹனஞ் ச வேதைச்ச ஸர்வை-ரஹமேவ வேத்யோ வேதாந்தக்ருத் வேதவிதேவ சாஹம் 15. உறைபவனும் யானே முழுவதினு முள்ளத் தூகமறி வெண்ணம் உண்டெனிட னின்று மறைமுழு ைதாலுந் தெரிதகுவன் யானே மறைமுடிபு செய்வேன் மறையுணர்வன் யானே. 557 எல்லாருடைய அகத்திலும் நான் புகுந்திக்கிறேன். நினைவும். ஞானமும், இவற்றின் நீக்கமும்-என்னிடமிருந்து பிறக்கின்றன. எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் யான் வேதாந்தத்தை ஆக்கியோன் யான் வேத முணர்ந்தோன் யானே. த்வாவிமெள புருஷெள லோகே கூடிரச்-சாக்ஷர ஏவ ச கூடிர: லர்வாணி பூதானி கூடலத்தோsகூடிர உச்யதே 16 அழிவை யுளனென்ன அழிவை யிலனென்ன அவனியினி லுள்ளார் புருட ரிருவேறாய் அழிவையுள தெல்லாப் பிராணி யுயிருந்தான் அழிவையிலன் கூட மாகவுள னென்பான். 568 உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர் அக்ஷர புருஷன், கூடிர புருஷன் என கூடிர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும். கூடஸ்தனே அக்ஷர புருஷன் (கூடிரம் - அழிவது அக்ஷரம் அழியாதது. கூடஸ்தன் - சிகரத்திலுள்ளோன். மாறுதலற்றோன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/228&oldid=799783" இலிருந்து மீள்விக்கப்பட்டது