பக்கம்:கீதைப்பாட்டு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதைப் பாட்டு ( பதினாறாம் அத்தியாயம்) தைவாசுர சம்பத் விபாக யோகம் C கீதை இயற்பொருள் ఎూrఉ4) ஈரெட் டெனுமியல் தேவரியல்பா சுரரியல்பை ஒரற்கு வகுத்தோதுதன் முன்னிட்டு மறைக்கே நேருற்று லயப்பட் டியல்கெனுந் தத்துவ நெறியைச் சேர்புற் றொழுகலினு முனர்தலினும் முறுதிக்கே முற்கூறிய தத்துவங்களைத் தெய்வத் தன்மை வாய்ந்தவர்களே உணர்வார்கள். அகரத் தன்மை வாய்ந்தவர்கள் அறியார்கள். தெய்வத்தன்மையுடையோர் மனது தெளிவுற்றிருக்கும். அவர் பிறருக்குத் தீங்கு செய்யார், கோப மறியார், பொறுமை இரக்கம் பெற்றிருப்பார். அகரத் தன்மையுடையோரோ டம்பமும், கொழுப்பும், கர்வமும், கோபமும். அயர்வும் பொருந்தியிருப்பார். தெய்வத்தன்மையுடையோர் சம்சார பந்தத்தினின்றும் விடுபடுவார். மற்றவரோ பின்னும் அதில் கட்டுப்படுவார். மேலும் அகரத்தன்மையுடையோர் வையகம் பொய்யென்றும் ஈசுவரனற்ற தென்றும் உரைப்பார்கள். தாங்களே இறைவனென்றும், தாங்களே வல்லவர்களென்றும், தாங்களே செல்வம் படைத்தவர்களென்றும், தங்களுக்கு நிகர் எவருமில்லையென்றும் எண்ணிக்கொண்டு கெட்ட காரியங்களைச் செய்து தாகத்தில் விழுவார்கள். அவர்களுக்கு சாஸ்திரத்தில் நம்பிக்கை கிடையாது. தெய்வத் தன்மை வாய்ந்தவர்களுக்கோ சாஸ்திரமே பிரணமானமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/231&oldid=799787" இலிருந்து மீள்விக்கப்பட்டது