பக்கம்:கீதைப்பாட்டு.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தைவாசுர சம்பத் விபாக யோகம் 231 புற பகவானுவாச : அபயம் லத்வ-ஸ்ம்சுத்திர்-ஜ்ஞான-யோக-வ்யவஸ்த்திதி: தானம் தமச்ச யஜ்ஞச்ச ஸ்வாத்த்யாயஸ்-தய ஆர்ஜவம் 1. சத்துவ சுத்தியுளத் தச்சமி லாதநிலை தன்னறி யோகமிசை மன்னுவ தோடுகொடை சித்தம டங்கன்மறை செப்புதல் வேள்விசெயல் செய்தவ மேவல்தனுட் பொய்கப டின்மையொடு 573 புரு பகவான் சொல்லுகிறான்: அஞ்சாமை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, ஈகை, தன் னடக்கம், வேள்வி, வேதங் கற்றல், தவம், நேர்மை, அஹிம்லா லத்ய-மக்ரோதஸ்-த்யாக: சாந்தி-ரபைசுனம் தயா பூதேஷ்-வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீ-ரசாபலம் 2. தீங்கிழை யாமைபிறர் தீங்குரை யாமை மெய்ம்மை செப்புதல் கோபமின்மை தியாக முயிர்க்கருளல் பாங்குறு சாந்தநிலை பசைதிலி லாமைமென்மை பாவமியற் றுழிநாண் சபல மிலாதபடி 574 கொல்லாமை வாய்மை, சினவாமை, துறவு ஆறுதல், வண்மை, ஜீவதயை, அவாவின்மை, மென்மை நாணுடைமை, சலியிாமை. தேஜ: கூடிமா த்த்ருதி: செளச-மத்ரோஹோ நாதிமானிதா பவந்தி லம்பதம் தைவீ-மபிஜாதஸ்ய பாரத 3. தேசு பொறைக்கணிலை திடம்பரி சுத்திதடை செய்தலி லாமைதருக் கெய்த லிலாமையெனப் பேசிவை தேவர் செல்வம் பேணி யுதித்தவற்குப் பெரிதுற லாகுமரோ பரதகுலத் தவனே. 575 ஒளி, பொறை உறுதி, சுத்தம், துரோகமின்மை - இவை தெய்வ சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன. பாரதா தம்ப்போ தர்ப்போSபிமானச்ச க்ரோத பாருஷ்யமேவச அஜ்ஞானஞ் சாபிஜாதஸ்ய பார்த்த லம்பத-மாலரீைம் 4. பெருமித மிடம்பஞ் சினனொடு மிடுக்குப் = பெருகிய குருரந் தெளிவை யடையாமை பிருதை மகனேயா சுரருடைய செல்வம் பேனியுத யஞ்செய் தானுடைய வாமே. 575 டம்பம். இறுமாப்பு. கர்வம். சினம், கடுமை, அஞ்ஞானம் - இவை அகர சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன. பார்த்தா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/232&oldid=799788" இலிருந்து மீள்விக்கப்பட்டது