பக்கம்:கீதைப்பாட்டு.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தைவாசுர சம்பத் விபாக. யோகம் 233 அவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்ற தென்றும் கடவுளற்றதென்றும் சொல்லுகிறார்கள். இது தொடர்பின்றிப் பிறந்த தென்றும் வெறுமே காமத்தை ஏதுவாக உடையது என்றும் சொல்லுகிறார்கள். ஏதாந் த்ருஷ்டி-மவஷ்டப்ப்ய நஷ்டாத்மானோsல்ப-புத்தய: ப்ரபவந்த்-யுக்ர கர்மான: கூடியாய ஜகதோsஹிதா: 9. இந்தவித மாயவுனர் வெய்தியுயிர் காணார் ஈனவறி வோர்கொடுமை யானவினை யாளர் நந்துசுப மேவரிய பாவிய ருலோக நாசமடை தற்குரிய காரணர்க ளாவர். 581 இந்தக் காட்சியில் நிலை பெற்று அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள் உலகத்துக்குத் தீங்கு சூழ்வோராய் அதன் நாசத்துக் காகக் கொடிய தொழில் செய்கின்றனர். காம-மாச்ரித்ய துஷ்பூரம் தம்ப்ப-மான மதான்விதா: மோஹாத் க்ருஹீத்வாsலத்க்ராஹான் ப்ரவர்த்தந் தேsசுசி வ்ரதா: 10. நிரப்பமுடி யாமலுள காமவச மாகி நின்றுள மருட்கையுட னன்றல்வழி யானே பொருட்டொகை படைத்தகசி போர்த்த விரதத்திற் பொங்குவ ரிடம்பமத மானமொடு போவர். 582 நிரம்பவொண்ணாத காமத்தைச் சார்ந்து. டம்பமும், கர்வமும், மதமும் பொருந்தியவராய், மயக்கத்தால் பொய்க் கொள்கைகளைக் கொண்டு அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள். சிந்தா-மபரிமேயாஞ் ச ப்ரலயாந்தா-முபாச்ரிதா: காமோபபோகபரமா ஏதாவதிதி நிச்சிதா: 1. ஊழிமுடி காறுமள வில்லபல வெண்ண்ம் உள்ளவர்க ளாகியுள காமசுக போகம் வாழி தலைமைத்தென மதித்திவள வேதான் வாழ்வென நினைத்ததுணி புள்ளவர்க ளம்மா. 583 பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளிற் பொருந்தி, விருப்பங்களைத் தீர்த்துக்கொள்வதில் ஈடுபட்டோராய், உண்மையே இவ்வளவுதான் என்ற நிச்சயமுடையோராய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/234&oldid=799790" இலிருந்து மீள்விக்கப்பட்டது