பக்கம்:கீதைப்பாட்டு.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசுடி சந்யாச யோகம் 269 மானுடருள்ளே, அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன் வேறில்லை. உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு உகந்தவன் வேறெவனுமாகான். அத்த்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் லம்வாத-மாவயோ: ஜ்ஞானயஜ்ஞேன தேனாஹ-மிஷ்ட ஸ்யாமிதி மே மதி: 70. எவனோ வறமோ டுளதா கியவில் விருவே முரையாடலை யோது வன்மற் றவனா லறிவெச்சம தால் வழிபட் டவனாகுவல் யானென லென்னினை வே. 694 நம்முடைய இந்தத் தர்மமயமான சம்பாஷணையை எவன் படிப்பானோ, அவன் செய்யும் அந்த ஞான யக்ஞத்தால் நான் திருப்தி பெறுவேன். இஃதென் கொள்கை. சரத்தாவா-னனல9யச்ச ச்ருனுயா-தபி யோ நர: லோsபி முக்த: சுபான் லோகான் ப்ராப்னுயாத் புண்ய கர்மணாம் 71. எவனரன் பொறாமை யிலபடி சிரத்தை யினையுடைய னாகி யிதுசெவி யினுண்பன் உவனும் விடுபட்டுப் புணியவினை யாளர்க் குரிய சுபலோக மிசையடைவ னம்ம. 595 நம்புதல் கொண்டு, பொறாமை போக்கி இதனைக் கேட்பது மட்டுமே செய்வானெனினும், அவனும் விடுதலையடைவான். அப்பால் புண்ணியச் செயலினர் நண்ணு நல்லுலகங்களெய்துவான். கச்சிதேதச்ச்ருதம் பார்த்த த்வயைகாக்ரேண சேதலா கச்சி-தஜ்ஞான-லம்மோஹ: ப்ரனஷ்டஸ்-தே தனஞ்ஜய 72. பிருதை சேய்தனஞ் சயவுனா லொரே பெற்றி யாயுள சித்தமோடிது சுருத மாயதோ புனதஞ் ஞானமே தொடரு மோகமுந் தொலைய லாயதோ, 59து பார்த்தா, சித்தத்தை ஏகாந்தமாக்கி இதை நீ கேட்டு வந்தனையா? தனஞ்ஜய, உன் அஞ்ஞான மயக்கம் அழிந்ததா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/270&oldid=799867" இலிருந்து மீள்விக்கப்பட்டது