பக்கம்:கீதைப்பாட்டு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ஜுன விஷாத யோகம் 4.1 திருதாஷ்டிரன் சொல்லுகிறான் : சஞ்ஜயா. அற நிலமாகிய குரு நிலத்தில் போர் செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும் பாண்டவரும் என்ன செய்தனர்? பைஞ்ஜய உவாச : த்ருஷ்ட்வா து பாண்டவாணிகம் வ்யூடந் துர்யோதனஸ்ததா ஆசார்ய-முபலங்கம்ய ராஜா வசன-மப்ரவீத் 2. ஒரு பாண்டு மகாரணி செய் படைகண் னுறவப் பொழு தோதுரி யோதனனாம் அரசன்குரு வின்னரு கிற்புகல்புக் கனனாயறை தந்தன னால் வசனம். 2 சஞ்சயன் சொல்லுகிறான் : அப்போது துரியோதனராஜன் அணிவகுத்து நின்ற பாண்டவர் படையைப் பார்த்துவிட்டு, ஆசாரிய துரோண னிடம் போய் ப் பின்வரும் வார்த்தை சொல்லலாயினன் : பச்யைதாம் பாண்டுபுத்ராணா-மாசார்ய மகதீஞ் சமூம் வ்யூடாந் த்ருபதபுத்ரேண தவ சிஷ்யேன தீமதா 3. குருவே நினதடி பயில்வோன் றுருபத குமரன் மதியுடை யவனாலே ஒருபாண் டுவின் வளர் புதல்வோ ரணிசெய்த வுயர்வா கியபடை யிது பாராய் - 3. "குருவே. துருபதன் மகனும் நின் சீடனுமாகிய நிபுணனால் வகுப்புற்ற இப்பெரிய பாண்டவப் படையைப் பார்! அத்ர சூரா மஹேஷ்வாலா பீமார்ஜூன ஸ்மா யுதி யுயுதானோ விராடச்ச த்ருபதச்ச மஹாரத: 4. இசையும்மிட னிதினின்றவர் தறுகண்மை நிறைந்தோர் இனையில் சிலை வலியானுயர் வினையெய்தினரிகலில் விசயன்னுடன் வீமன் னென வேயன்னவ ரம்மா விராடன்யுயு தானன்றுரு பதமாரத னுடனே. + இங்கு குரரும் பெரிய வில்லாளிகளும் போரில் வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய பலர் இருக்கிறார்கள் - யுயுதானன். விராடன் மகாரதனாகிய துருபதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/42&oldid=799919" இலிருந்து மீள்விக்கப்பட்டது