பக்கம்:கீதைப்பாட்டு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கீதைப் பாட்டு அக் குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமேற்படுகிறது. இவர்களுடைய பிதிர்க்கள் பிண்டமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள். தோஷைரேதை: குலக்னானாம் வர்ணலங்கர- காரகை: உத்ஸ்ாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாச்ச சாச்வதா: 43. குடிகெ டுத்தவர் வருனமொன்று படுத்து மிப்பிழை கோளினால் நெடுநி லைப்புள குலவறத்தொடு நின்ற சாதிதன் மங்கெடும். 43 வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக்கேடர் செய்யும் இக்குற்றங்களால் ஜாதி தர்மங்களும் தொன்று தொட்டுள்ள குலதர்மங்களும் எடுபட்டுப் போகின்றன. உத்ஸ்ன்ன குலதர்மானாம் மனுஷ்யாணாஞ் ஜனார்த்தன நரகே நியதம் வாலோ பவதீத்-யனுசுச்ரும 4. குலவ றங்கெட நின்ற மானிடர் குடியிருப்பிரு ளாவதோ உலைவி லாதமெய் யென்று பன்முறை யோர்த்த லுண்டு சநார்த்தன. 44 ஜநார்த்தன. குலதர்மங்கள் எடுபட்டுப்போன மனிதருக்கு எக்காலும் நரகத்தில் வாசமென்று கேள்விப்படுகிறோம். அஹோ பத மஹத்பாபம் கர்த்தும் வ்யவலிதா வயம் யத்ராஜ்ய-லகை-லோபேன ஹந்தும் ஸ்வஜன-முத்யதா: 45. ஐயோ பெரும்பாவஞ் செய்யத் துணிந்தோம் அதிதுக்க மிதுவம்ம வெதனான்மண் னெல்லாங் கையாள் சுகத்தாசை யானம்மி னத்தோர் களையாம் வதித்தற் கெழுந்தோ மதாலே. 45 அந்தோ அரசவின்பத்தை விழைந்து சுற்றத்தாரைக் கொல்ல முற்படும் நாம் பெரிய பாவஞ்செய்யத் தலைப்பட்டோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/53&oldid=799931" இலிருந்து மீள்விக்கப்பட்டது