பக்கம்:கீதைப்பாட்டு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலாங்கிய யோகம் 67 நேஹாபிக்ரம-நாசோsஸ்தி ப்ரத்யாவாயோ ந வித்யதே ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் 40. இதன்கட் டொடக்கங் கெடற்காவ தில்லை i இடைவிட்ட போழ்தத்தொர் குற்றம் புகாதால் இதுதன்ம மோவற்ப மேயென்னி னுந்தான் இரக்கிக்கு மிக்குள்ள வச்சத்தி னின்றே. 87 இதில் முயற்சிக்கு அழிவில்லை. இது வரம்பு மீறிய செய்கையுமன்று. இந்தத் தர்மத்தில் சிறிதிருப்பினும், அஃதொருவனைப் பேரச்சத்தினின்று காப்பாற்றும். வ்யவலாயாத்மிகா புத்தி-ரேகேஹ குருநந்தன பஹூ சாகா ஹ்யனந்தாச்ச புத்தயோsவ்யவஸாயினாம் 1. உயிரின் கனொர்நிச் சயமுள் ளவறி வொன்றே குருநந் தனவிவி விடனில் உயிரின் கனொர்நிச் சயமில் லரறி வொன்றல பலசாகைய வெண்ணிலவால், SS குருகுலத் தோன்றலே உறுதியுடைய புத்தி இவ்வுலகத்தில் ஒருமையுடையது. உறுதியில்லாதோரின் மதி பல கிளைப்பட்டது. முடிவற்றது. யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்-யவிபச்சித: வேதவாதரதா பார்த்த நான்ய-தஸ்தீதி வாதின. 42. வேதஞ்சொ லப்பெற்ற வற்றாசை யுற்றார் வேறில்லை யென்றோது கிற்பா ரெதோவிப் போதே மலர்ந்தன்ன சொல்லோது வார்தாம் புந்திக்கு ளோரார்கள் குந்திக்கு மைந்த 89 வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார் சிலர். பூக்களைப் போன்ற அலங்காரச் சொற்கள் பேசுகிறார்கள். தமது கொள்கை யொழிய மற்றது பிழையென்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/68&oldid=799947" இலிருந்து மீள்விக்கப்பட்டது