பக்கம்:கீதைப்பாட்டு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கீதைப் பாட்டு யா நிசா ஸர்வபூதானாம் தஸ்யாம் ஜாகர்த்தி ஸம்யe யஸ்யாம் ஜாக்ரதி பூதானி லா நிசா பச்யதோ முனே: 69. எலாவு யிர்க்குமிர வெதுவதிற்பொறி யினைய டக்கினன் விழிக்குமற் றெலாவு யிர்க்குமெது நனவ தாகுமஃ திரவு காணுறு முனிக்கரோ 116 எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், தன்னைக் கட்டிய முனி விழித்திருக்கிறான். மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ அதுவே முனிக்கிரவு. ஆபூர்யமான-மசலப்ரதிஷ்ட்டம் ஸ்முத்ரமாப: ப்ரவிசந்தி யத்வத் தத்வத் காமா யம் ப்ரவிசந்தி ஸர்வே ல சாந்தி-மாப்னோதி ந காமகாe 70. நிறைந்தசைவி லாதுநிலை யாயகட லின்கண் நீர்நனியொ டுங்குவதெவ் வாறுகொலவ் வாறே உறைந்தெவனு ளேவிடயம் யாவையு மொடுங்கும் உவனடைவன் சாந்தி நசையினை விழைவ னெய்தான். 117 கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும் நிரப்புதற்குரிதாய் அசையா நிலை கொண்டிருப்பது போலே. விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்வான் எவனோ அவன் சாந்தியடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான். விஹாய காமான் ய: லர்வான் புமான்ச்-சரதி நிஸ்ப்ருஹ: நிர்மமோ நிரஹங்கார: ஸ சாந்தி-மதிகச்சதி == 71. பற்றற்குறு விடயங்களை முற்றும்மற விட்டுப் பசையற்றவ னாயுந்தன தெனலற்றவ னாயும் மற்றுந்தனுை யறவிட்டவ னாயும்மியல் வானெம் மனிதன்னவ னேசாந்தியை நனியெய்துவ னாகும். II8 இச்சையற்றான் எல்லா இன்பங்களையும் துறந்தான். என தென்பதற்றான். யானென்பதற்றான். அவனே சாந்தி நிலை அடைகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/77&oldid=799957" இலிருந்து மீள்விக்கப்பட்டது